மலையகத் தமிழர்கள் இந்திய – இலங்கை உறவின் பாலமாக இருப்பார்கள் – நாம் 200 நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன்

மலையகத் தமிழர்கள் இந்திய – இலங்கை உறவின் பாலமாக இருப்பார்கள் – நாம் 200 நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன்

Share it if you like it

பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் இலங்கை முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கு அவர்களுக்கு தேவையான தேயிலை காபி ரப்பர் தோட்டங்கள் ஏராளமாக பயிரிடப்பட்டது. அதில் குறைந்த கூலிக்கு வேலை செய்யவும் அங்கு இருந்த வனம் சார்ந்த இடங்களை விவசாயத்திற்கு ஏற்ப பண்படுத்தி பிரிட்டிஷாருக்கு தேவையான விவசாயம் உற்பத்தி சார்ந்த விஷயங்களில் உழைப்பதற்காகவும் பாரதத்திலிருந்து பலரும் வலுக்கட்டாயமாக இலங்கைக்கு கொண்டு போகப் பட்டார்கள். தென் தமிழகத்தின் வறட்சியான பிரதேசத்தில் இருந்த அப்பாவி மக்களை வலு கட்டாயமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தியது பிரிட்டிஷ் அரசு . அவர்கள் இலங்கை மலையகத் தமிழர்கள் என்ற பெயரில் அடையாளப்படுத்தப்பட்டார்கள். பின்னாலில் இலங்கையும் இந்தியாவும் சுதந்திரம் பெற்ற பிறகு அவர்களின் குடியுரிமை சிக்கல் எழுந்தது அதில் இரு நாடுகளும் உடன்படிக்கை செய்து கொண்டு அதன் பெயரில் அவர்களின் இலங்கை குடியுரிமை சீரமைக்கப்பட்டது. சில லட்சம் பேரை பாரதம் உடன்படிக்கையின் படி திரும்ப அழைத்துக் கொண்டது.

பிரிட்டிஷாரால் வலுக்கட்டாயமாக கொண்டு போகப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்ட மலையத தமிழர்கள் புலம்பெயர்ந்த 200 வது ஆண்டு தற்போது அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக நாம் 200 ஒற்றுமை பன்முகத்தன்மை மற்றும் பாரம்பரியத்தின் முழக்கம் என்ற பெயரில் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சியை இலங்கை மலையக தமிழர்களளுக்காக இலங்கையின் உள்நாட்டு தோட்ட தொழில் துறை மற்றும் அரசு தொழில்துறை அமைச்சகம் முன்னெடுத்தது. இலங்கையில் உள்ள மலையக தமிழர்களின் உறவு பாலமாக இலங்கை அமைச்சராக முன்னெடுக்கும் இந்த நிகழ்ச்சியில் மலையக தமிழர்கள் அவர்களின் பூர்வீக தமிழ் பூமி சார்ந்த அரசியல் பிரதிநிதிகளாக கலந்து கொள்ள பாரதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பாரதத்தின் மத்திய நிதி அமைச்சர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டார் . மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் .

மூன்று நாள் நிகழ்வாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி இலங்கை மழையாக தமிழர்களின் நலன் வளர்ச்சியில் இலங்கை மற்றும் பாரத அரசுகளின் பங்களிப்பு மற்றும் திட்ட ஒருங்கிணைப்புகளை பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாஜகவின் மூத்த தலைவரான நிர்மலா சீதாராமன் மற்றும் தமிழக பாஜக தலைவர் உள்ளிட்டவர்கள் இலங்கைக்கு மூன்று நாள் பயணமாக போயிருக்கிறார்கள். அங்கு கொழும்பு மாநகரில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா என்னும் இந்திய வங்கியின் இரண்டு புதிய கிளைகளை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். திரிகோணமலை திருகோணேஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்தார். முன்னதாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன் மலையகத் தமிழர்களான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார்.

விழாவில் பேசுகையில் இலங்கை அரசு கடும் நிதி நெருக்கடியில் கடந்த ஆண்டு சிக்கிய போது உடனடியாக உதவிக்கரம் நீட்டியது பாரதம் . இந்திய ரூபாய் மதிப்பில் 33 ஆயிரம் கோடிகளை இலங்கைக்கு உதவியாக வழங்கியது. பாரதத்தால் இலங்கையின் வலியை ஒரு நாளும் ஏற்க முடியாது. மிகச்சிறந்த நண்பன் என்ற முறையில் இலங்கைக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை பாரதம் கடமையாக கருதுகிறது. ஐஎம் எஃப் எனும் சர்வதேச நிதியத்தின் உதவி இலங்கைக்கு கிடைப்பதற்காக முதலில் ஆதரவு கரம் நீட்டியது பாரதம் தான். அதை தொடர்ந்து சர்வதேச நிதியத்தின் உதவி கிடைப்பதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டது. உற்ற நண்பன் என்ற பெயரில் கடன் சீரமைப்பு விவாதங்கள் மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் இலங்கை அரசுக்கு பாரதம் தன் முழு ஆதரவையும் அளிக்கும் .

கடந்த ஜூலை மாதம் இலங்கை பாரதம் இணைந்த பொருளாதார ஒத்துழைப்புக்கான தொலைநோக்கு திட்டம் வெளியிடப்பட்டது இவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவோம். இரு நாடுகளும் எதிர்நோக்கி இருக்கும் சவால்களில் இருந்து விடுபட்டு செழிப்புடன் வாழ்வதற்கு இணைந்த கரங்களாக செயல்படுவோம். பாரதத்தை பூர்வீகமாக உடைய தமிழர்கள் இலங்கையின் நலனுக்காகவும் இலங்கை பாரதம் இரண்டு நாடுகளின் நல்லுறவற்கும் பாலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்று பேசினார். இந்த விழாவில் இலங்கை அதிபர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று இருந்தார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போரில் சிக்கித் தவித்து அதன் காரணமாக பெரும் சீரழிவில் இலங்கை பரிதவிக்கிறது. இலங்கையை தனது காலனி நாடாக மாற்ற முயன்று பெரும் கடனாளியாக மாற்றிவிட்டு சீனா தற்போது நழுவுகிறது. ஆனாலும் பாரதத்திற்கு எதிரான ஒரு சீன கேந்திரமாக இலங்கையை தக்க வைக்கும் முயற்சிகளையும் விடாப்பிடியாக செய்து வருகிறது. ஆனால் இலங்கை கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் போது இலங்கை மக்களுக்கு உணவு பொருட்கள் மருந்து அத்தியாவசிய பொருட்கள் இலங்கையின் நிர்வாக நிதிக்கு தேவையான குறைந்தபட்ச நிதியை ஒதுக்கி உடனடியாக உதவிக்கரம் நீட்டியது பாரதம் மட்டுமே. அதன் முயற்சியால் மட்டுமே சர்வதேச நிதியத்தின் கடன் உதவி இலங்கைக்கு கிடைப்பது உறுதியானது.

உள்நாட்டு போரால் சீரழிந்து கிடக்கும் இலங்கைக்கு அங்கு அனைத்து தரப்பினரும் சகல உரிமையோடு வாழ்வதற்கும் உள்நாட்டு சிக்கல்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கும் உரிய முன்னெடுப்புகளை பாரதத்தின் வெளியுறவுத் துறையும் தேசிய பாதுகாப்பு முகமையும் இணைந்து முன்னெடுத்து வருகிறது. இதில் ஒரு கட்டமாக இலங்கையில் போரால் சீரழிந்த தமிழ் மக்களுக்கு சுமார் 50,000 வீடுகளை கட்டிக் கொடுக்கும் பொறுப்பை பாரதம் ஏற்றுக் கொண்டது.‌ அதன் அடிப்படையில் முதல் தொகுதிகளாக கட்டப்பட்ட வீடுகளை கடந்த ஆண்டு பிரதமர் இலங்கைக்கு போய் கிரகப்பிரவேச விழா பங்கேற்று தமிழ் மக்களுக்கு அவர்களது வீட்டை அவர்களுக்கு பாரதத்தின் அன்பு பரிசாக வழங்கி வந்தார்.

இன்றைய மலையக தமிழர்களின் நாம் 200 விழாவின் மூலம் மலையாக தமிழர்களுக்கு தேவையான குடியிருப்புகள் அவர்களுக்கு வாழ்வாதாரம் உறுதி செய்யும் கட்டமைப்புகள் செய்வதில் பாரதம் முனைப்பு காட்டி வருகிறது. அவ்வகையில் உள்நாட்டு சிக்கலுக்கு மட்டுமல்லாது அங்கு இருக்கும் பூர்வீக இந்திய தமிழர்களின் வாழ்க்கைக்கும் அவர்களின் எதிர்காலத்திற்கும் தேவையான நடவடிக்கைகளை பாரதம் முன்னெடுத்து வருகிறது. இது எதிர்காலத்தில் இலங்கையின் சிங்கள மக்களுக்கு நல்லெண்ணம் நம்பிக்கை வரச் செய்யவும் அதன் மூலம் இலங்கையின் உள்நாட்டு குழப்பத்திற்கு நிரந்தர தீர்வு காணவும் உதவும். மறுபக்கம் இந்திய இலங்கை உறவு சீர்படவும் நல்லுறவு மேம்படவும் பாலமாக அமையும்.

இலங்கையில் ஒருபுறம் ராஜ்ஜிய ரீதியாக பாரதத்தின் நலனை பாதுகாக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை பாரதத்தின் வெளியுறவுத் துறை முன்னெடுக்கிறது. சர்வதேச போதை ஆயுதக் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்தின் தளமாக இலங்கையை மையப்படுத்தி தென் தமிழகத்தை குறி வைக்கும் பல சதி செயல்களுக்கும் எதிராக பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுத்து வருகிறது . அதே நேரத்தில் இந்திய இலங்கை உறவு மேம்படவும் அங்குள்ள மக்கள் அனைவரும் நலம் பெறவும் தேவையான வளர்ச்சிப் பணிகள் உதவிகள் கட்டமைப்புகளையும் பாரதம் முனைப்போடு செய்து வருகிறது. யுத்தத்தில் சீரழிந்த ஏராளமான இந்து ஆலயங்கள் மற்றும் பௌத்த தலங்களையும் பாரதம் தனது சொந்த செலவில் சீரமைத்து வருகிறது. மேலும் இலங்கை சிங்கள் ராணுவத்திற்கு பாரதத்தில் இருக்கும் புத்த கயா புனித தலத்தை தரிசிக்கவும் விசேஷ சலுகைகள் மற்றும் வழிப்பாட்டு உரிமைகளை வழங்கி உள்ளது . இதன் மூலம் மத ரீதியாகவும் பௌத்த மதத்தின் பிறப்பிடமான பாரதம் சிங்கள மக்களுக்கு என்றைக்கும் நலன் விரும்பியே என்பதை பாரதம் மெய்ப்பிக்கிறது‌. அவ்வகையில் பாரதம் பிரிவினைவாதம் மத பயங்கரவாதத்திற்கு மட்டுமே எதிரி. தவிர எந்த நாட்டிற்கும் மொழிக்கும் இனத்திற்கும் விரோதி அல்ல . அனைத்து மக்களும் நலமோடும் வளமோடும் வாழ்வதற்கே பாரதம் பங்களிப்பு வழங்கும் என்பதை ஒவ்வொரு நிகழ்விலும் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் மெய்ப்பித்து வருகிறது.


Share it if you like it

One thought on “மலையகத் தமிழர்கள் இந்திய – இலங்கை உறவின் பாலமாக இருப்பார்கள் – நாம் 200 நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன்

  1. Super..பிரமாதம், ஸ்ரீ நிதி அமைச்சரே..

Comments are closed.