பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை அவதூறாக விமர்சித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், ஹிந்து ஒருவரை அம்ஜத் என்கிற இஸ்லாமிய நபர் கார் ஏற்றி நசுக்கிக் கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் விந்தியாச்சல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ஹோலாகி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் தர் துபை. இவரது சகோதரர் ராகேஷ் தர் துபேயின் மகனுக்கு கடந்த 11-ம் தேதி மிர்சாபூரில் திருமணம் நடந்தது. இதற்காக தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களான ஹோலாகி கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திதேந்திர குமார் பாண்டே, லால் ஜி மிஸ்ரா உள்ளிட்ட சிலருடன் சென்றிருக்கிறார். பின்னர், திருமணம் முடிந்து மறுநாள் நிகழ்ச்சிகளும் முடிவடைந்த நிலையில், தனது குடும்பத்தினரை ஒரு வாகனத்தில் ஏற்றி அனுப்பி விட்டு, மற்றொரு வாகனத்தில் தனது நண்பர்களுடன் வந்திருக்கிறார். அந்தக் காரின் டிரைவர் அம்ஜத்.
இந்த நிலையில், காரில் வரும்போது தற்போது தாங்கள் சென்று கொண்டிருக்கும் சாலை உட்பட உ.பி. மாநிலம் முழுவதும் பக்காவாக சாலைகள் அமைக்கப்பட்டிருப்பது தொடர்பாக, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும், அனைவருக்கும் வீடு, வீடுதோறும் கழிப்பறை, இலவச கேஸ் ஆகியவை வழங்கியதற்காக பிரதமர் மோடியையும் பாராட்டி இருக்கிறார். இதனால். ஆத்திரமடைந்த டிரைவர் அம்ஜத், ஏழை முஸ்லீம்களின் அநியாயமாக இடிப்பதாகக் கூறி யோகியையும், மோடியையும் கடுமையாக விமர்ச்சித்திருக்கிறார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், உடன் வந்த நண்பர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள்.
பின்னர், லால் ஜி மிஸ்ரா, திதேந்திர குமார் பாண்டே ஆகியோரை அவரவர் வீட்டில் இறக்கிவிட்டு, நிறைவாக ராஜேஷ் தர் துபேயை அவரது வீட்டில் இறக்கி விட்டிருக்கிறார் அம்ஜத். ராஜேஷ் தர் துபை வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னார் அதிவேகமாக காரை ஓட்டி வந்த அம்ஜத், ராஜேஷ் துபை மீது பயங்கரமாக மோதி இருக்கிறார். இதில், ராஜேஷ் துபை 20 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், அக்கம்பக்கத்தினர் பார்த்து கூச்சலிட்டிருக்கிறார்கள். இதைக் கண்ட அம்ஜத், காரை திருப்பிக் கொண்டு எஸ்கேப்பாகி விட்டார். இதில், ராஜேஷ் துபே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, ராஜேஷ் துபேயின் உறவினர்கள் சம்பவ இடத்தில் திரண்டு, குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீஸார், குற்றவாளியை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதனிடையே, சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி அம்ஜத் என்பதை கண்டுபிடித்த போலீஸார், அவனை கைது செய்தனர். மாநில முதல்வரையும், நாட்டின் பிரதமரையும் அவதூறாக விமர்சித்ததை தட்டிக்கேட்டதற்காக ஹிந்து ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.