ஆங்கில புத்தாண்டு தினத்தில் நள்ளிரவில் கோவில்களில் பக்தர்கள் வழிபடுவதற்கு தடை இல்லையென்று தமிழக அரசு அறிவித்ததற்கு இந்து முன்னணி கடும் கண்டனம்.
இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறுகையில், ”இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட அறிக்கையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் கோவில்களில் பக்தர்கள் வழிபடுவதற்கு தடை இல்லையென்று அறிவித்தார். அந்த அறிவிப்பு ஹந்துகளுக்கு விரோதமான செயலாகும். தமிழக அமைச்சர் சேகர் பாபு ஹிந்து கோவில்களுக்கு நன்மை செய்வது போல் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறாரே தவிற அவர் ஹந்து கோவில்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. இவர் அறிவித்த அறிக்கை கோவில் ஆகம விதிகளுக்கு எதிரானது. அதனால் அவர் அறிக்கையை வாபஸ் பெற வேண்டும். ஏற்கனவே தமிழக அரசு பல கோவில்களை இடிப்பது போன்ற காரியங்கள் ஹிந்துக்கள் மனதை புண்படுத்தி வருகிறது. மேலும் இந்த அறிக்கையும் ஹிந்துகளுக்கு எதிரானதே, அறிக்கையை வாபஸ் பெறவில்லை என்றால் தமிழக அரசின் நடவடிக்கையை கண்டித்து ஹந்து பெரியவர்கள், மடாதிபதிகள் மற்றும் ஹிந்துக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் நடத்தும்” என்று கூறினார்.