ஹிந்து மதத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பரப்பியதாக, கிலாபத் இயக்கத்துடன் தொடர்புடைய தஞ்சாவூரைச் சேர்ந்த 3 பேரின் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் இருப்பதாகவும், இவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் ஹிந்து மதத்தைப் பற்றியும், ஹிந்துக்கள் பற்றியும் அவதூறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அந்த வகையில், தஞ்சாவூரில் வசிக்கும் கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த அப்துல் காதர் என்பவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருப்பதை தேசிய குற்றப் புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும், ஹிந்துக்களைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பரப்பி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, அப்துல் காதர் கடந்த ஓராண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியைச் சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும், ஹிந்துக்களைப் பற்றி அவதூறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பாபா பக்ருதீனும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில் தஞ்சாவூர் கீழவாசல் தைக்கால் தெருவைச் சேர்ந்த அப்துல் காதர், முகமது யாசின், காவேரி நகரைச் சேர்ந்த அகமது ஆகியோருக்கும் கிலாபத் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடனும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இவர்களும் ஹிந்து மதத்தைப் பற்றியும், ஹிந்துக்களைப் பற்றியும் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துகளை பரப்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, மேற்கண்ட 3 பேரின் வீடுகளிலும் தேசிய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இன்று (பிப்.12-ம் தேதி) காலையிலிருந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும், அப்துல் காதர், முகமது யாசின் ஆகியோரின் செல்போன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு, சில முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபகாலமாக, ஹிந்து பெண்களை விபசாரிகளாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் ஏராளமான கட்டுக்கதைகள் வருகின்றன. அதாவது, இஸ்லாமிய இளைஞர்களை பார்த்து ஹிந்து பெண்கள் ஆசைப்படுவதுபோலவும், செக்ஸ் வைத்துக் கொண்டது போலவும் மிகவும் ஆபாசமாகவும், அறுவெறுக்கத்தக்க வகையிலும், கட்டுக்கதைகள் உலாவருவது குறிப்பிடத்தக்கது. ஆகவே, மேற்படி அவதூறு கதைகளுக்கும், மேற்கண்ட இஸ்லாமிய இளைஞர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகம் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.
நல்ல நடவடிக்கை…