ஒலிம்பிக் ‘தங்கமகன்’ அவமதிப்பு: விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் ‘விளையாட்டு’!

ஒலிம்பிக் ‘தங்கமகன்’ அவமதிப்பு: விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் ‘விளையாட்டு’!

Share it if you like it

ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஹாக்கி கேப்டன் உள்ளிட்ட ஹாக்கி வீரர்கள், தமிழகத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் விழாவில் அவமதிக்கப்பட்ட விவகாரம், தமிழகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

2023-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஆண்கள் ஹாக்கி தொடரை இந்தியா நடத்துகிறது. இப்போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள ரூர்கேலாவில் எதிர்வரும் ஜனவரி 13-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இத்தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜனவரி 13-ம் தேதி ஸ்பெயினுடன் மோதுகிறது. 2-வது ஆட்டத்தில் 15-ம் தேதி இங்கிலாந்துடனும், கடைசி லீக் ஆட்டத்தில் 19-ம் தேதி வேல்ஸ் அணியுடனும் மோதுகிறது. இத்தொடரை முன்னிட்டு, ஹாக்கி உலகக் கோப்பை டிராபி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணமாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

அந்த வகையில், உலகக் கோப்பை டிராபி மும்பையிலிருந்து விமானம் மூலம் நேற்று சென்னைக்கு வந்தடைந்தது. இந்த டிராபிக்கு சென்னை விமான நிலையத்தில் ஹாக்கி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் தமிழ்நாடு ஹாக்கி சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்புக் கொடுத்தனர். தொடர்ந்து, உலகக் கோப்பை டிராபியை ஊர்வலமாக எடுத்துச் சென்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோரை சந்தித்து டிராபியை காண்பித்து வாழ்த்து பெற்றனர். பின்னர், மாலை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் உதயநிதி தலைமையில் கோப்பை வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில்தான் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்த ஹாக்கி கேப்டன் உள்ளிட்ட வீரர்கள் அவமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதாவது, ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை டிராபி வெளியீட்டு விழாவில், 1980-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்த இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ‘தங்கமகன்’ வாசுதேவன் பாஸ்கரனும் கலந்து கொண்டார். ஆனால், மேடையின் முன்வரிசையில் அமைச்சர்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட 8 பேருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. அதேசமயம், தங்கமகன் வாசுதேவன் பாஸ்கரன் உள்ளிட்ட ஓய்வுபெற்ற ஹாக்கி வீரர்களுக்கு 2-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. இது தங்கமகனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே, விழா ஏற்பாட்டாளர்களை அழைத்து தங்கமகன், இது என்ன அரசியல் கட்சி மீட்டிங்கா அல்லது விருது வழங்கும் விழாவா? அரசியல்வாதிகளுக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கிவிட்டு, முன்னாள் வீரர்களுக்கு பின்னால் இருக்கை ஒதுக்கி இருக்கிறீர்கள் என்று சவுண்டு விட்டார்.

இதனால் விழாவில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்களும், அமைச்சர்களும் ஷாக் ஆகினர். இதையடுத்து, தங்கமகன் வாசுதேவன் பாஸ்கரன் உள்ளிட்ட வீரர்களுக்கு முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. இச்சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்ற முதல் நிகழ்ச்சியிலேயே விளையாட்டு வீரர்கள் அவமதிக்கப்பட்ட விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறி இருக்கிறது.


Share it if you like it