உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சிற்கு உள்துறை அமைச்சர் பதிலடி

உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சிற்கு உள்துறை அமைச்சர் பதிலடி

Share it if you like it

தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஒன்று கூடி நடத்திய சனாதன ஒழிப்பு மாநாடு சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. ஒழிக்கப்பட வேண்டியது .அதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருந்தார். இந்து மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த பேச்சு நாடு முழுவதும் வைரலாக பரவியது . இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு மாநிலத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட மாண்பு பாதுகாப்பேன் என்ற உறுதி மொழியோடு பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு மாநில அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் ஒரு குறிப்பிட்ட மதத்தை அதன் மாண்பை குறைக்கும் வகையில் பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிலடி கொடுத்து பேசி இருக்கிறார்.

உள்துறை அமைச்சரின் பதிலடிக்கு நான் ஸ்டாலினின் மகன் .கலைஞரின் பேரன் . பெரியார் அண்ணா வழியில் நடப்பவன்,. இந்த காவிகளின் மிரட்டலுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் . என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று மீண்டும் உதயநிதி தேசிய நிலையில் புதுடில்லியில் இருக்கும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினித் ஜின்டால் என்பவர் புது தில்லி காவல் நிலையத்தில் தமிழகத்தில் ஒரு அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருப்ப சனாதனத்தை இழிவுபடுத்தும் வகையிலும் பேசி அவமதித்து இருக்கிறார். என் போன்ற சனாதனத்தை பின்பற்றும் மக்கள் இந்த பேச்சினால் பெரும் மன உளைச்சலும் அவமதிப்பையும் உணர்கிறோம் .எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்து இருக்கிறார்.

இதில் உள்துறை அமைச்சர் பேசிய பேச்சை அவரது கண்டிப்பை திமுகவினர் ஏதோ உதயநிதிக்கு அமித்ஷாவே பதிலடி கொடுக்கும் அளவிற்கு உதயநிதி வளர்ந்து விட்டதாக பெருமை பேசிக்கொண்டு திரிகிறார்கள் . அமித் ஷாவின் பேச்சு என்பது சாதாரணமாக கடந்து போவது அல்ல. அவரின் ஒவ்வொரு வார்த்தையும் நாடு முழுவதும் போய் சேரக்கூடியது. இந்தியா முழுவதிலும் அரசியலில் பிரதிபலிக்க கூடியது .அந்த வகையில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக கட்சி அதன் எம் எல் ஏ அமைச்சர் சனாதனத்தை எதிர்ப்பது போதாது . எப்படி மலேரியா டெங்கு கொரோனா உள்ளிட்ட வைரஸ்களை அழிக்க ஒன்றாக இணைந்து போராடினமோ? அதே போல் சனாதனத்தையும் அழிக்க ஒருங்கிணைய வேண்டும் என்று பேசி இருப்பதை நாடு முழுவதும் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார். அந்த வகையில் இதுவரையில் திமுகவினரின் இந்து இந்திய விரோத நடவடிக்கைகள் தமிழக எல்லையை தாண்டாமல் இருந்தது. இப்போது அது அமீத்ஷா மூலமாக இந்தியா முழுவதும் போய் சேர்ந்திருக்கிறது.

இந்திய அரசியலமைப்பு சட்ட சாசனத்தின்படி பதவியேற்றுக்கொண்ட தமிழக அரசின் முதல்வர் தனது அமைச்சரவையில் இருக்கும் ஒரு அமைச்சர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் ஒரு குறிப்பிட்ட மதத்தை அதை பின்பற்றும் மக்களை அவமதிக்கும் வகையில் இழிவு படுத்தி பேசி இருப்பதை இதுவரை கண்டிக்கவில்லை. அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு கட்சித் தலைவராக அவரது கட்சி சட்டமன்ற உறுப்பினர் அமைச்சரின் நடவடிக்கைக்கும் கட்சி தலைவராகவும் அவர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த வகையில் சனாதன எதிர்ப்பு ஒழிப்பு என்னும் நிலைப்பாட்டில் தமிழக மாநில அரசும் திமுக கட்சியும் ஒற்றை நிலைப்பாட்டில் இருப்பதை அமித்ஷா நாடு முழுவதும் கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்.

இதில் தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஒன்று கூடி நடத்திய இந்து சனாதன எதிர்ப்பு மாநாட்டிற்கு மதசார்பற்ற அரசு என்று சொல்லிக் கொள்ளும் சட்டத்தின் வழியில் அமைந்த ஒரு மாநில அரசு எப்படி அனுமதி கொடுத்தது? இதற்கு அனுமதி கொடுத்தது யார்? என்ற கேள்வி வரை இனி தேசிய அரசியலில் விமர்சனத்திற்கு உள்ளாகும். இந்த நிகழ்ச்சி நடந்த இடம் காங்கிரசுக்கு சொந்தமான கட்டிடம் என்பதால் காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவின் இந்த இந்து சனாதன ஒழிப்பு என்ற நிலைப்பாட்டில் உடன்பாடு இருக்கிறதா? இதில் அவர்களுடைய நிலைப்பாடு என்ன ? என்பதும் கேள்வியாகும். இதுவரையில் உதயநிதியின் இந்த பேச்சை தமிழக காங்கிரஸ் தலைமை கண்டிக்கவில்லை . காங்கிரஸின் தேசிய தலைமையும் இதைப்பற்றி எந்த ஒரு விளக்கமும் இதுவரையில் கொடுக்கவில்லை. அந்த வகையில் உதயநிதியின் இந்த பேச்சில் காங்கிரசின் மாநில தேசிய தலைமை நிலைப்பாடு என்ன? என்பதற்கான கேள்வியும் பாரத அரசியலில் எழும்.

ஒரு மாநிலத்தில் எழுத்தாளர் சங்கம் கலைஞர் சங்கம் என்று பல சங்கங்கள் ஒன்று கூடி சனாதன ஒழிப்பு மாநாடு என்று முன்னெடுத்த மாநாட்டில் இந்து அறநிலைய துறையை பாதுகாப்பதற்கு என்று உருவாக்கப்பட்ட துறையின் அமைச்சர் கலந்து கொண்டு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். அப்படி எனில் தமிழக இந்து அறநிலையத்துறை இந்து தர்மத்தை எதிர்த்து ஒழிப்பவர்களுக்கு துணை போகிறதா? என்ற கேள்வியும் இனி தேசிய அரசியலில் விவாத பொருளாகும் . இவ்வளவு விஷயங்களையும் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக ஆளுநரை நோக்கி இனி இது பற்றிய கேள்விகள் வரும். நடந்த நிகழ்வுகள் அதில் மாநில அரசின் பங்களிப்பு – நிலைப்பாடு இங்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்று அனைத்தையும் அவர் அறிக்கையாக கொடுக்கும் பட்சத்தில் அதன் தாக்கம் என்னவாக இருக்கும் ? என்பது அரசியலமைப்பு சட்டத்தையும் சாசனத்தையும் உணர்ந்தவர்களுக்கு தெரியும்.

திமுக அமைச்சர் உதயநிதியின் இந்த சனாதன ஒழிப்பு என்ற பேச்சுக்கு இதுவரையில் தமிழக பாஜக தலைவரை கடந்து வேறு எவரும் வலுவான கண்டனத்தை பதிவு செய்யவில்லை. அந்த வகையில் தமிழகத்தில் இருக்கும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் பலரும் கூட கள்ள மவுனம் காப்பது மூலம் அவர்களும் சிறுபான்மை வாக்கு வங்கி அரசியல் என்ற நிலைப்பாட்டிலோ, அல்லது பாஜகவை வளர விடாமல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் திமுக மறைமுகமாக ரகசிய உடன்படிக்கை என்ற நிலைப்பாட்டிலோ இருக்கிறார்கள் என்பது தெளிவாகும். அது தெளிவாகும் பட்சத்தில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் பெரும் மாற்றங்களும் வரக்கூடும்.

உதயநிதியின் இந்த பேச்சிற்கு தமிழக பாஜக தலைவர் கொடுத்த பதிலடியும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் புது தில்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளும் தமிழகத்தில் இந்து சனாதன எதிர்ப்பு ஒழிப்பு என்று அரசியல் செய்து கொண்டு வரும் இந்து இந்திய விரோதிகளுக்கும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகள் அமைப்புகளுக்கும் ஒரு பாடமாக இருக்கும். இதை தேசிய பாஜக தலைமையும் மாநில பாஜக தலைமையும் தமிழகத்தின் எதிர்க்கட்சி அரசியல் என்ற எல்லையை கடந்து இந்த மண்ணின் தர்மத்தை எதிர்க்கும் அழிக்கும் இந்து விரோதிகளில் சூழ்ச்சி என்ற பெயரில் நாடு முழுவதும் பரவலாக கொண்டு சேர்க்கும் முயற்சி திமுகவின் தேசிய அரசியலுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். அதன் மூலம் தமிழகத்தில் இதுவரையில் திமுகவும் அதன் நேரடி மறைமுக கூட்டணி கட்சிகளும் செய்து வரும் இந்து விரோதம் நாடு முழுவதிலும் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்படும் . இதன் மூலம் ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் திமுகவின் இந்த இந்து விரோத செயல்பாடுகளும் சனாதன ஒழிப்பு அரசியலுக்கு நெருக்கடியை கொடுக்கும். அந்த வகையில் அவர்கள் ஒன்று திமுகவின் இந்த சனாதன ஒழிப்பு நிலைப்பாட்டில் உடன்பட்டு அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இல்லையேல் சனாதன ஒழிப்பு இந்து இந்திய விரோத திமுகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றி திமுகவின் சனாதான ஒழிப்பு நிலைப்பாட்டில் எங்களுக்கு சம்பந்தமும் இல்லை என்பதை அவர்கள் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற இக்கட்டான நிலை ஏற்படும்.

ஐ.என்.டி.ஐ.ஏ கூட்டணியில் இருக்கும் முக்கியஸ்தர்கள் பலரும் குடியுரிமை திருத்த சட்ட முதல் ராமஜன்ம பூமி வரை முக்கிய விஷயங்களில் அவர்கள் எடுத்த நிலைப்பாடு பெரும்பான்மை மக்களை விரோதித்துக் கொள்ளாத நடுநிலை அரசியலும் உண்மை என்னும் பட்சத்தில் திமுகவின் வெளிப்படையான இந்த விரோதத்தை அவர்கள் கண்டிக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கிறது .அந்த கட்டாயத்தை அமித்ஷாவின் கண்டன பேச்சும் தமிழக பாஜக தலைவரின் காட்டமான பதிலடி நாடு முழுவதும் கொண்டு சேர்த்து இருக்கிறது. உச்ச நீதிமன்ற வழக்கறிஞரின் புகார் மனு சட்டப்படியான நடவடிக்கைக்கு நீதிமன்றத்தின் வாசலை தட்டி இருக்கிறது. திமுகவின் இந்து விரோதம் இந்திய விரோதம் இரண்டிற்கும் இந்திய அரசியல் சட்ட சாசனப்படி ஒரு சட்டப்படியான தீர்வும் அரசியல் அரங்கில் ஒரு தெளிவான முடிவும் நோக்கி பாஜக நகர்த்தி போகிறது என்பது மிக சரியான நடவடிக்கை. அந்த வகையில் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த மண்ணின் தர்மத்தை பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை பாதுகாக்க தேசிய பாஜக தலைமையும் தமிழக பாஜக தலைமையும் இதர இந்து அமைப்புகளும் ஒருங்கிணைந்து இந்திய அரசியல் அரங்கில் இருந்து திமுக போன்ற இந்து இந்திய விரோதிகளை நிரந்தரமாக அப்புறப்படுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தேசியவாதிகளின் எதிர் பார்ப்பு.

கடந்த காலங்களில் காங்கிரஸின் இந்து விரோதத்தால் எதிர்ப்பாரின்றி வளர்ந்த திமுக தமிழக பாஜகவின் பலவீனத்தால் அராஜகத்தில் வளர்ந்த திமுக. இன்று அண்ணாமலை அமீத் ஷா மோடி என்ற பெரும் இந்து சனாதனிகள் தேசியவாதிகள் மூலமாக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக வலுவான எதிர்ப்பை சித்தாந்த ரீதியாக எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதுவரையில் அராஜகம் வன்முறை என்று வளர்ந்த கட்சி இன்று அதை எல்லாம் அனாவசியமாக எதிர் கொள்ளும் பாஜகவை எதிர் கொள்ள வேண்டிய நிலை. அந்த வகையில் இனி தேசிய மாநில அரசியலில் இந்து இந்திய விரோதம் ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருந்து அரசியல் களம் சுழலும்.


Share it if you like it