ஈரானில் கெளரவக் கொலை: மதவெறியின் உச்சம்!

ஈரானில் கெளரவக் கொலை: மதவெறியின் உச்சம்!

Share it if you like it

ஈரானில் மனைவியை கெளரவக் கொலை செய்து, அவரது தலையை வெட்டி வீதியில் நடந்து சென்ற கொடூர கணவனுக்கு உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் குவிந்து வருகிறது.

ஈரான் நாட்டை சேர்ந்தவர் சஜ்ஜாத் ஹெய்தாரி. இவர், தனது 17 வயதுடைய மனைவி மோனாவின் தலையை துண்டித்து அஹ்வாஸ் நகரின் தெருக்களில் சிரித்துக் கொண்டே நடந்து சென்றார். இக்காணொளி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவர் சஜ்ஜாத் ஹெய்தாரியின் கொடுமை தாங்க முடியாமல், கடும் இன்னல்களை அனுபவித்து வந்த மோனா, அவரை விவாகரத்து செய்ய விரும்பியுள்ளார். ஆனால், தனது 3 வயது மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கணவர் செய்த கொடுமைகளை அமைதியாக ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.

கணவரின் அத்துமீறிய செயல்கள் எல்லை மீறிச் செல்லவே, துருக்கி நாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளார். ஆனால், தனது குடும்பத்தினர் சமாதானப்படுத்தியதைத் தொடர்ந்து மீண்டும் ஈரானுக்குத் திரும்பியுள்ளார். மோனா திரும்பி வந்த சில நாட்களுக்குப் பிறகு, சஜ்ஜாத் ஹெய்டாரியும், அவரது சகோதரரும் மோனாவின் கைகளைக் கட்டிப் போட்டு விட்டு, அவரை கொடூரமான முறையில் கொன்றிருக்கிறார்கள். பின்னர், மோனாவின் துண்டிக்கப்பட்ட தலையுடன் சஜ்ஜாத் வீதியில் நடந்து சென்ற சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்புகளும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன. தவிர, ஈரானில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 375 முதல் 450 கவுரவக் கொலைகள் நடப்பதாக அந்நாட்டு புள்ளி விவரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பெண் வெறுப்பு, ஆணாதிக்க கலாசாரமே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Share it if you like it