விருதுநகர் பா.ஜ.க வேட்பாளரின் மனித நேயம்..! 

விருதுநகர் பா.ஜ.க வேட்பாளரின் மனித நேயம்..! 

Share it if you like it

அரவக்குறிச்சி சிங்கம் அண்ணாமலை போன்று, தானும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்., என்று விரும்பிய 38 வயது உடைய இளைஞர், பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து. அரசியலிலும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன். அமைதியாக பல சேவைகளையும், மக்கள் பணிகளையும், இன்று வரை திறம்பட செய்து வருகிறார். விருதுநகர் சட்டமன்ற தொகுதியின், பா.ஜ.க வேட்பாளர் ’பென்டகன்’ பாண்டுரங்கன் என்று கூறினால் அது மிகையன்று.

இந்நிலையில் பெண்டகன் பாண்டுரங்கனின் மனித நேயம் குறித்து இணையதளவாசி (செளமியா தினேஷ்) என்பவர் தனது கருத்தை டுவிட்டரில் இவ்வாறு கூறியுள்ளார்.

‘மேன்மக்கள் மேன் மக்களே’ என்ற கூற்றே நினைவிற்கு வந்தது. வாழ்கையில் எவ்வளவு தூரம் சென்றாலும், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், சக மனிதனுக்காக ஒரு நிமிடம் யோசிக்கும் அந்த பண்பு ஒன்றே இவர்களைப் போன்ற தன்னலமற்ற மனிதநேய வாதிகளை மேலும் பல சிகரங்கள் தொட வைக்கும் என்பதில் அணுவளவும் ஐயமில்லை.

பிரச்சாரத்தின் போது ஒரு வீட்டில் தனக்கு இளநீர் கொடுக்கும்போது தன்னுடன் களப்பணியாற்ற வந்த கார்யகர்த்தர்கள் தனக்காக வெயிலில் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்து நான் மட்டும் குடிக்கிறேன் மக்கள் வெளிய நிக்கிறாங்களே என்று கூறிவிட்டு அவருக்கு கொடுக்கப்பட்ட இளநீரை பருக ஒரு நிமிடம் தயங்கும் அந்த மனிதநேயம். இந்த குணதிற்காக தான் ஆட்சி மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் தீவிரமாக விருதுநகரில் களப் பணியாற்றி வருகிறார்கள் என்பதை அறிந்தேன்.

இதுபோன்ற அரிய மனிதர்களை எல்லாம் பாரதிய ஜனதா கட்சியில் மட்டுமே காண இயலும். சாமியானா போட்டுக் கொண்டு வெயில் படாமல் பிரச்சாரத்திற்கு செல்லும் ஸ்டாலினுக்கோ, உதயநிதிக்கோ, இவர்களின் பண்பு சுட்டுப் போட்டாலும் வராது. தலைமுறை தலைமுறையாய் அரசியலில் தங்கள் குடும்பமே பிழைக்க வேண்டும் என்பதையே குறிக்கோளாக கொண்டு திருட்டு திமுக செயல்பட்டு வருகிறது.

அவர்களிடம் சக மனிதனை மதிக்கும் பண்பை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. இம்மாதிரியான வேட்பாளராய் அமர்த்தும் பொழுது பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை கண்டு நடுங்கத்தான் செய்யும் என்று குறிப்பிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it