‘அல்லாஹு அக்பர்’ சொல்: ஹைதராபத்தில் ஹிந்து மாணவரை தாக்கிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள்!

‘அல்லாஹு அக்பர்’ சொல்: ஹைதராபத்தில் ஹிந்து மாணவரை தாக்கிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள்!

Share it if you like it

ஹைதராபாத்தில் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் ஒருவரை, அல்லாஹூ அக்பர் என்று சொல்லச் சொல்லி இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹைதராபாத்திலுள்ள ஐ.பி.எஸ். நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ., எல்.எல்.பி. படித்து வருபவர் ஹிமாங் பன்சால். கடந்த 2-ம் தேதி, பன்சாலின் அறைக்கு அதே கல்லூரியில் படிக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்திருக்கிறார்கள். ரூமில் தனியாக இருந்த பன்சாலை, பேண்டை கழட்டும்படி கூறியிருக்கிறார்கள். அவர் மறுக்கவே, கன்னத்தில் பளார் விட்ட அடிப்படைவாதிகள், அல்லாஹூ அக்பர் என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். வேறு வழியின்றி பன்சாலும் அல்லாஹூ அக்பர் என்று கூறியிருக்கிறார். அதன் பிறகும், அக்கும்பல் அவரை விடவில்லை. அவரை எட்டி உதைத்தும், அவர் மீது ஏறி அமர்ந்தும் கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.

இச்சம்பவத்தில் பன்சாலுக்கு முகம், தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டது. ஆனால், தாங்கள் தாக்கியதை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் செய்தாலோ அல்லது வேறு யாரிடமாவது சொன்னாலோ, இக்கல்லூரியில் படிக்க முடியாது என்றும், கொலை செய்து உடலை கண்காணாத இடத்தில் வீசிவிடுவோம் என்றும் அக்கும்பல் மிரட்டி இருக்கிறது. இச்சம்பவம் அனைத்தையும் அக்கும்பலில் ஒருவன் வீடியோவாகப் பதிவு செய்திருக்கிறான். ஆகவே, தான் தாக்கப்பட்டது குறித்து கல்லூரி நிர்வாகத்திடமோ, வேறு யாரிடமோ பன்சால் சொல்லவில்லை. இதனால், இந்த விவகாரம் கடந்த 10 நாட்களாக ரகசியமாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில்தான், இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பல்சாலை தாக்கும் வீடியோ எப்படியோ, யார் மூலமோ சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், இந்த விவகாரம் பெரும் பேசு பொருளாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பெற்றோரும், உறவினர்களும், நண்பர்களும் பன்சாலை தொடர்புகொண்டு, நடந்த சம்பவம் பற்றி விசாரித்திருக்கிறார்கள். இதனிடையே, இச்சம்பவம் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ஹிந்து அமைப்பினர் பன்சாலை தொடர்புகொண்டு பேசியதோடு, அவரிடமிருந்து புகாரை பெற்று போலீஸில் கொடுத்தனர். இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மேற்கண்ட இஸ்லாமிய அடிப்படைவாத மாணவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Share it if you like it