நான் ஒரு விதவை : இறைவன் அருளால் பாஜக தான் வெற்றி அடையும் – கம்யூனிஸ்ட் பெண் ஆவேசம் !

நான் ஒரு விதவை : இறைவன் அருளால் பாஜக தான் வெற்றி அடையும் – கம்யூனிஸ்ட் பெண் ஆவேசம் !

Share it if you like it

தேர்தல் நெருங்குவதால் பாஜகவினர் கச்சை கட்டிக்கொண்டு ஜெயித்தே தீருவோம் என்கிற உறுதியான மனநிலையோடு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். கேரளாவில் பொதுவாக கம்யூனிஸ்ட்கள் அதிகம் இருப்பதால் அங்கு எப்போதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் ஆட்சியில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி கேரளா வந்து சென்ற பின்பு கம்யூனிஸ்ட் அலையானது மோடி அலையாக மாறிவிட்டது. பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகர் வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். அப்போது ஒரு வீட்டில் உள்ள பெண்மணி ஒருவர் பாஜக வேட்பாளர் சந்திரசேகர் அவர்களிடம், எனது குடும்பத்தில் 7 வாக்குகள் உள்ளன. நான் ஒரு முழுமையான கம்யூனிஸ்ட். இதை இப்போது சொல்கிறேன். இறைவன் அருளால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நான் ஒரு விதவை. ஏழு மாதங்களாக ஓய்வூதியம் இல்லாமல் தவித்து வருகிறேன்.’’ என்று மிக ஆவேசமாக அந்த பெண்மணி கூறுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜீவ் சந்திரசேகருக்கு, கேரள வாக்காளர் ஒருவர் அளித்த உறுதிமொழிகள் இவை.

சசி தரூர் கடந்த 15 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்து வருகிறார். அவர் நகர மக்களிடையே பிரபலமாக இல்லை. சிரித்த முகமும், ஆக்ஸ்போர்டு ஆங்கிலமும் தவிர, திருவனந்தபுரத்தின் வளர்ச்சிக்காக அவர் எதையும் செய்யவில்லை. மக்கள் இதை உணர்ந்து, ராஜீவ் சந்திரசேகருக்கு ஆதரவான அலை தெளிவாக உள்ளது.

கடந்த தேர்தல்களின் போது, ​​காங்கிரசுக்கு ஆதரவாக, கடலோர ஓட்டுகள் பெருமளவில் மாறியதால், பா.ஜ., போட்டியில் தோல்வியடைந்தது. இதைப் புரிந்துகொண்ட ராஜீவ் சந்திரசேகர், இந்தப் பகுதிகளில் தனது கவனத்தைச் செலுத்துகிறார்.

பா.ஜ.க.வை தோற்கடிக்க கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸும் மீண்டும் ஒருமுறை திரைமறைவில் ஒன்று சேரும். இந்த முறை வெற்றி பெறுவார்களா என்று பார்ப்போம்.

https://x.com/Bharatiyan108/status/1769633863330935031?s=20


Share it if you like it