நேர்ல இருந்தனா எதுல அடிப்பேன்னு எனக்கே தெரியாது – கதிர் ஆனந்த்தை எச்சரித்த பெண்கள் !

நேர்ல இருந்தனா எதுல அடிப்பேன்னு எனக்கே தெரியாது – கதிர் ஆனந்த்தை எச்சரித்த பெண்கள் !

Share it if you like it

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். நேற்று தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்று அவர் பேசிய பேச்சானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பேசிய காணொளியும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. அதில் பெண்களை பார்த்து எல்லோரும் பவுடர், கிரீம் பூசிக்கிட்டு பளபளப்பா இருக்கீங்க..என்ன ஆயிரம் ரூவா வந்துருச்சா..என்று ஆபாசமாக பேசினார். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இந்த சம்பவத்தை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கதிர் ஆனந்த் பேசிய பேச்சுக்கு பெண்கள் கூறியதாவது :-

இந்த வீடியோவை பார்த்தா அவ்வளவு கோவம் வருது எனக்கு. நான் நேர்ல மட்டும் இருந்திருந்தா செவுலயே குடுத்துருப்பன்.

இவங்க ஆயிரம் ரூவா குடுக்குறதுக்கு முன்னாடி நாங்க எல்லாம் கிரீம், பவுடர் போடவே இல்லையா.

அவங்க வீட்டு பொண்ணுங்க கிட்டயும் இப்படிதான் பேசுவாங்களா. இந்த மாதிரி பேசுனா யாரா இருந்தாலும் அடிக்கணும்னு தான் தோணும்.

பளபளப்பா கிரீம் பவுடர் எல்லாம் போட்டு வந்துருக்கீங்க…ஆயிரம் ரூவா வந்துருச்சான்னு சொன்னா…இது எவ்வளவோ கேவலமாக இருக்கு..

அவருக்கு என்ன தகுதி இருக்கு இந்த மாதிரி சொல்ல… அவங்க வீட்டு பொம்பளைங்க கிட்டயும் இப்படிதான் ஆயிரம் ரூவா குடுத்து மேக்கப் பண்ண சொல்லுவாரா ?

இவங்க குடுக்குற ஆயிரம் ரூவா வச்சுதான் நாங்க மேக்கப் போட்டு திரியுறோமா..?

நேர்ல இருந்தார்னா நான் எதுல அடிபேன்னு எனக்கே தெரியாது ?

இந்த மாதிரி எங்க ஏரியால பேசுனா அப்பவே சட்டையை புடிச்சி கேட்டுருவோம் ..

இத வந்து நான் ஈவ்டிசிங்காத்தான் நா பாக்குறேன்….

இவ்வாறு கதிர் ஆனந்த் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் தங்கள் கருத்துக்களை கூறியுள்ளனர்.

https://x.com/indhavaainko/status/1773661069476532528?s=20


Share it if you like it