ராமர் கோவில் கட்டுவதற்காக நானும் சிறை சென்றிருக்கிறேன் – ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா !

ராமர் கோவில் கட்டுவதற்காக நானும் சிறை சென்றிருக்கிறேன் – ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா !

Share it if you like it

அயோத்தியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதை தீபாவளி போல கொண்டாட வேண்டும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், இதுகுறித்து ஹிமாச்சலப் பிரதேச மாநில ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது 500 ஆண்டுகால போராட்டத்தின் விளைவு. இது ஒரு கலாச்சார எழுச்சி. இதற்கு இந்தியப் பிரதமர் மோடியின் முக்கிய பங்களிப்பும் மாநில மக்களை ஈர்க்கிறது என்று என்னால் சொல்ல முடியும்.

கர சேவையின்போது ஏராளமான மக்கள் உயர்த் தியாகம் செய்திருக்கிறார்கள். தலைமுறைகள் கடந்து விட்டன. நான் உற்சாகமாக இருக்கிறேன். ராமர் கோவில் கட்டுவதற்காக நானும் சிறை சென்றிருக்கிறேன்.

ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் முடிந்தவுடன் ராஜ்பவனை அலங்கரிப்பேன். இங்கு மிக சிறப்பாக தீபாவளியைக் கொண்டாடுவேன். அந்த நாளை தீபாவளியாகக் கொண்டாடுமாறு இந்திய மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

கும்பாபிஷேகத்தன்று மக்களை செல்ல வேண்டாம். தங்கள் வீடுகளில் இருந்து விழாவைப் பார்த்து தீபாவளியைக் கொண்டாடலாம் என்று கூறியிருக்கிறார். ஆகவே, நான் கும்பாபிஷேகத்திற்குப் போகவில்லை. ஆனால், அதை நான் இங்கிருந்தே பார்ப்பேன். தீபாவளியை ராஜ்பவனில் கொண்டாட முடிவு செய்திருக்கிறேன்” என்றார்.


Share it if you like it