“போன மாதம் 36 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தியுள்ளேன்” – ஏழை, எளியவர்களின், நிலை என்ன? பிரபல திரைப்பட இயக்குனர் புலம்பல்..!

“போன மாதம் 36 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தியுள்ளேன்” – ஏழை, எளியவர்களின், நிலை என்ன? பிரபல திரைப்பட இயக்குனர் புலம்பல்..!

Share it if you like it

பிரபல திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் மிகவும் துணிச்சலாக பேச கூடிய நபர் என்பது அனைவரும் அறிந்ததே. நீட் தேர்விற்கு எதிராக தி.மு.க உட்பட அதன் கூட்டணி கட்சிகள் கருத்து தெரிவித்து வரும் இவ்வேளையில் அனிதாவின் மரணத்திற்கு காரணம் இரு திராவிட கட்சிகளே என்று மிகவும் துணிச்சலாக பேசியவர் தங்கர் பச்சான்.

அதே போன்று தமிழக முதல்வரின் தவறை சுட்டிக்காட்டும் விதமாக சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியிருந்தார்.

முதலமைச்சர் மீது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை குறையத் தொடங்கிவிட்டன. பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள மாற்று வழிகளை கையாண்டு மதுக்கடைகளை நிரந்தரமாக மூடிவிட்டால் முதலமைச்சர் அவர்களின் அரசியல் வாழ்வில் இதுவே மணிமகுடமாகத்திகழும் அவரை மக்கள் என்றென்றும் போற்றுவார்கள்.

மூடப்பட்ட மதுக்கடைகளை அரசாங்கம் எதற்காக திறந்திருக்கிறது என்பதற்கான காரணம் எல்லோருமே அறிந்ததுதான்! மக்களின் உயிரை விட, வாழ்வாதாரத்தை விட, குடும்ப நலனை விட அரசாங்கத்தின் வருமானம் மட்டுமே முக்கியமானது எனும் நிலைக்கு தமிழ்நாட்டை திராவிட கட்சிகள் உருவாக்கி வைத்து விட்டன என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து மின் கட்டணம் குறித்து தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியதாவது.

“16 ஆயிரம் மட்டுமே என் வீட்டிற்கு மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், கடந்த மாதத்தில் 36 ஆயிரம் ரூபாய் மின்சாரக் கட்டணமாக செலுத்தியுள்ளேன். ‘’திமுக தேர்தல் அறிக்கையில் மின்சாரக் கட்டணக்கொள்ளையை தடுக்கும் விதமாக மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என கூறியதை முதல்வர் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்கள் மாதாந்திர அடிப்படையில் தான் ஊதியங்களைப் பெறுகின்றனர். அதுவும் ஒரே ஒரு நாள் கூட தாமதமாகாமல்! ஆனால் மின்சாரக்கட்டண கணக்கெடுப்பு மட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை குறிக்கப்படுகின்றன. மாதம் மாதம் கணக்கெடுத்திருந்தால் 16 ஆயிரம் மட்டுமே என் வீட்டிற்கு மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், கடந்த மாதத்தில் 36 ஆயிரம் ரூபாய் மின்சாரக் கட்டணமாக செலுத்தியுள்ளேன்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என கணக்கெடுக்கப்படுவதால் இரண்டேகால் மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. திமுக தேர்தல் அறிக்கைகளில் இந்த மின்சாரக் கட்டணக்கொள்ளையை தடுக்கும் விதமாக மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என முதலமைச்சர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அடுத்த மாத மின் கட்டணம் செலுத்தும் தேதியை எண்ணி அஞ்சிக்கொண்டிருக்கின்றேன். ஒரு வீட்டின் மின் கட்டண செலவே இவ்வளவு என்றால் மற்ற குடும்பச் செலவுகளை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியவில்லை. அடுத்த மின் கட்டணமும் இதேபோல் செலுத்தச்சொன்னால் அதற்கானத்திறன் தமிழ் நாட்டில் எத்தனைக் குடும்பங்களுக்கு இருக்கும் என்பதை முதலமைச்சர் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தொழில் வாய்ப்பின்றி, வேலை வாய்ப்பின்றி பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்க இயலாமல் வருமானமின்றி தவித்துக் கொண்டிருக்கும் இம்மக்களுக்கு முதலமைச்சர் உடனடியாக மாதாந்திர மின் கட்டண முறையை அறிவித்து உதவ வேண்டுகின்றேன்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

நன்றி ;கதிர் நீயூஸ்

 


Share it if you like it