சமூக வலைத்தளத்தில் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அந்த காணொளியில் திமுகவின் சின்னமான உதய சூரியனை திமுக கட்சியை சேர்ந்த ஒருவர் தனது கையில் பச்சை குத்தியுள்ளார். அவரிடம் வாக்கு சேகரிக்க சென்ற பாஜக நிர்வாகி ஒருவர், இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளித்த திமுக உறுப்பினர், நான் கடந்த 30 வருடங்களாக திமுகவிற்கு தான் வாக்களித்து வருகிறேன். ஆனால் தற்போது என் மனம் மாறிவிட்டது. தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் நான் திமுகவிற்கு வாக்களிக்கமாட்டேன், அதற்கு மாறாக அண்ணாமலைக்கு தான் வாக்களிப்பேன் என்று பேசியுள்ளார். இந்த காணொளியை பாஜகவினர் வைரலாக்கி வருகின்றனர்.
https://x.com/annamalai_chap2/status/1772883942128943565?s=20