தெலங்கானா மாநிலம் ஜக்டியாலில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ஒவ்வொரு பெண்ணும் சக்தியின் வடிவம். ஒவ்வொரு தாயும், ஒவ்வொரு மகளும் சக்தியின் வடிவம். நான் அந்த வடிவத்தை வணங்குகிறேன். இந்த தேசம் சந்திரயான் வெற்றியை சிவசக்திக்கு அர்ப்பணித்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் சக்தியை அழிப்பது பற்றி பேசுகின்றன.
நேற்று சிவாஜி பூங்காவில் திரண்ட இண்டி கூட்டணிக் கட்சிகள் தங்களின் இலக்கு சக்தியை அழிப்பது எனப் பேசியுள்ளன. தாய்மார்களே, சகோதரிகளே நான் உங்கள் அனைவரையும் சக்தியாக பாவிக்கிறேன். நான் பாரத மாதாவை பூஜிப்பவன். இருப்பினும் இண்டியா கூட்டணி ‘சக்தியை’ அழிப்போம் என்று சூளுரைத்துள்ளது. அந்த சவாலை நான் ஏற்கிறேன்.
இந்த தேசத்தின் தாய்மார்களை, சகோதரிகளைப் பாதுகாக்க நான் எனது உயிரையும் தியாகம் செய்வேன். இந்த தேசம் முழுவதும் வரும் தேர்தலில் பாஜகவுக்கு 400 சீட்களுக்கும் மேல் கிடைக்கும் என்று பேசுகிறது. நாம் வெல்வோம்” என்றார்.
ராகுலின் ’சக்தி’ பிரயேகத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட பாஜக, பெண்களைக் குறிக்கும் ’சக்தி’ என்பதற்கு எதிராக அவர் பேசியதாக விமர்சித்து வருகிறது. அதையே பிரதமர் மோடியும், இன்றைய தனது பிரச்சாரக் கூட்டத்தில் ராகுலையும், இந்தியா கூட்டணியையும் வறுத்தெடுத்தார்.