பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப். கடந்த காலங்களில் பாகிஸ்தான் இராணுவ ஆட்சியால் நாடு கடத்தப்பட்டவர். அரசியல் அகதியாக பிரிட்டனில் தஞ்சம் புகுந்தவர். தற்போது பிரிட்டனில் வசித்து வரும் பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் நவாஸ் அடுத்த மாதம் நாடு திரும்ப இருப்பதாகவும் எதிர்வரும் பாகிஸ்தானின் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்.பாரதம் நிலவில் கால் பதிக்கும் போது பாகிஸ்தான் உலக நாடுகளில் கையேந்தி நிற்கும் நிலையை வேதனையுடன் தனது சகாக்களிடம் பகிர்ந்து கொண்டவர். பாகிஸ்தானின். இந்த சீரழிவை மாற்ற வேண்டும். நாடு மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு போகப்பட வேண்டும் என்று தனது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்காரர்களுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார்.
பாகிஸ்தானின் பலத்தை வளர்ச்சியை மீட்டெடுக்க வேண்டும் என்று அதன் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டனிலிருந்து அறைகூவல் விடுப்பதும் அதற்காக மீண்டும் தேசத்திற்கு திரும்பி வந்து முழு நேர அரசியலில் ஈடுபட்டு எதிர்வரும் தேர்தலை சந்திக்க தயாராகி வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இதே நவாஸ் ஷெரீப் கடந்த காலத்தில் வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் இரண்டு நாட்டு மக்களுக்கும் எதுவாக சாலை வழியாக பேருந்து போக்குவரத்து ரயில் போக்குவரத்து என்று இருநாட்டு மக்களின் நலனை ஒருமைப்பாட்டை மனதில் வைத்து வாஜ்பாய் ஆட்சி காலம் தீட்டிய திட்டங்களை எப்படி அனுகினார் ? ஒருபுறம் வாஜ்பாயோடு கைகுலுக்கி வரவேற்று மறுபுறம் பயங்கரவாதிகள் சதிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருந்தவர்.
துபாயிலிருந்து நாடு திரும்பி பாகிஸ்தான் அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்து இந்திய எதிர்ப்பு மனநிலையை கைவிட்டு பாரதத்தோடு நல்லுறவு பாராட்டி அதன் மூலம் பாகிஸ்தானையும் வளர்ச்சி பாதையில் கொண்டு போக வேண்டும் என்று முயற்சி செய்த பெனசீர் ஃபூட்டோ லாகூரில் ஒரு பேரணியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டபோது மௌனம் காத்தவர். ஒரு மாபெரும் எதிர்க்கட்சித் தலைவர் தேசத்தின் சக அரசியல்வாதி முன்னாள் பிரதமர் என்ற வகையில் அந்த விஷயத்தில் எந்த ஒரு அரசியல் நகர்வையும் எதிர்ப்பையும் பதிவு செய்யாமல் கடந்து போனவர்.
பெனசீர் புட்டோவின் படுகொலைக்கு பின் பழமைவாத இஸ்லாமிய அமைப்புகள் பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள் இந்திய பாகிஸ்தான் உறவை சீர்குலைக்க விரும்பும் சர்வதேச உளவு அமைப்புகள் என்ற பல்வேறு அமைப்புகள் இருந்தாலும் அப்போதைய பாகிஸ்தான் அதிபராக பர்வேஸ் உஷாரத்தின் பெயர் தான் முதல் இடத்தில் அடிபட்டது. ஆனால் அதைப்பற்றி நவாஸ் மற்றும் அவரது கட்சி மூத்த நிர்வாகிகள் இன்று வரை ஒரு வார்த்தை கூட பேசாமல் கள்ள மவுனம் காத்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காத்மண்டுவிலிருந்து கடத்தப்பட்ட விமானம் காந்த காருக்கு பயணித்ததும் அதன் பின்னணியில் இருந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் தேடுதலில் இருந்து தப்பிக்க மிகுந்த பாதுகாப்போடும் ராஜ உபச்சாரத்தோடும் பாகிஸ்தானின் அப்போதாபாத் நகரில் வாழ்ந்து வந்ததன் காரண கர்த்தா. அதற்கு தேவையான முழுமையையும் பாகிஸ்தானின் ராணுவம் உளவுத்துறை உள்ளிட்டவை செய்து வந்ததும் அம்பலமான போது அதில் பர்வேஸ் முஷாரப் நவாஸ் அவர்களின் பெயரும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.
முஷாரப் பின் உத்தரவிற்கு ஏற்ப ராணுவத்தை ஊடுருவ வைத்து கார்கிலில் பெரும் யுத்தத்திற்கு காரணமானவர். அதன்மூலம் பாரதத்தின் பொருளாதார இழப்புக்கள் ராணுவ உயிரிழப்புக்கள் பொருள் சேதங்களுக்கு காரண கர்த்தாவாக இருந்தவர். பல்வேறு பயங்கரவாதம் நடவடிக்கைகளுக்கு காரணமான லஷ்கர் இ தோய்பா ஜெய்ஷ் இ முகமத் ஆசாதி காஷ்மீர் இந்தியன் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு முழு தளமாக பாகிஸ்தான் இருப்பதற்கு காரணமாக இருந்தவர். பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாத முகாம்கள் நிறவியதை கள்ள புன்னகையோடு கடந்து போனவர்.
உண்மையில் பாகிஸ்தான் இந்த நிலையில் இருந்து மீண்டும் வரவேண்டும் எனில் அதற்கு ஒரு புறம் பாரதத்தின் ஆதரவு வேண்டும். மறு புறம் உலக நாடுகளின் ஒத்துழைப்பு வேண்டும். இந்த இரண்டும் கிடைத்தாலும் அதை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி பாகிஸ்தானை வளர்ச்சி பாதையில் கொண்டு போக இந்திய விரோதம் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை கடந்த உண்மையான பாகிஸ்தானின் தேச வளர்ச்சியை விரும்பும் ஒரு வலுவான அரசியல் ஆளுமை வேண்டும். இது எதுவுமே தற்போது பாகிஸ்தானில் சாத்தியம் இல்லை என்பது தான் யதார்த்த நிலை. இதையெல்லாம் நன்கு உணர்ந்தும் லண்டனில் பத்திரமாக வாழ்ந்து வரும் நவாஸ் எதிர்வரும் தேர்தலில் பங்கெடுக்க இருப்பதும் அதன் மூலம் பாகிஸ்தானில் மீண்டும் ஆட்சி அமைத்து அதை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு போவேன் என்று சூளுரைப்பதெல்லாம் பாகிஸ்தானின் மக்களை தேன் தடவிய வார்த்தைகளால் நம்ப வைத்து ஏமாற்றி மீண்டும் எப்படியாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும். அதன் மூலம் உலக நாடுகள் ஆதரவோடு மீண்டும் வளம் கொழிக்கும் அதிகாரக் கொள்ளையை முன்னெடுக்க வேண்டும் என்பதை தவிர வேறில்லை .