காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதானியின் சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிப்பேன் – காங்கிரஸ் தலைவர் ராகுல் – அத்தியாயம் ஒன்று.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதானியின் சொத்துக்களை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிப்பேன் – காங்கிரஸ் தலைவர் ராகுல் – அத்தியாயம் ஒன்று.

Share it if you like it

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் வெற்றி பெற்று மத்தியில் அரசு அமைத்தால் கார்ப்பரேட் முதலாளியான அதானிக்கு சொந்தமான சொத்துக்கள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டில் உள்ள ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சித் தலைமையின் இளவரசருமான ராகுல் குறிப்பிட்டு இருக்கிறார். ராகுலுக்கும் காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கும் இணக்கமாக அறியப்படும் சில அந்நிய அமைப்புக்கள் இந்திய விரோதமாக சமீப காலமாக செயல்பட்டு வருவதில் அதானி தொடர்ந்து குறிவைக்கப்படுகிறார். அதில் அவரின் மீது பல்வேறு அவதூறு பிரச்சாரங்கள் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டது.

பெரு முதலாளியாக ஒரு இந்தியர் வளர்ந்து வருவதை அந்நிய நிறுவனங்களும் பாரதத்திற்கு எதிரான சக்திகளும் விரும்பாதது தெரியும். அவர்களின் முகமாக இந்தியாவில் அரசியல் செய்யும் காங்கிரசும் விரும்பாது என்பது தெரிந்த உண்மைதான். அது அப்பட்டமாக பொதுவெளியிலேயே காங்கிரஸின் இளவரசர் வெளிப்படுத்தி இருப்பது அவர்களின் தேசவிரோத எண்ணங்களுக்கு மேலும் ஒரு சாட்சியாக மாறி இருக்கிறது. பாரதத்தில் பெரு முதலாளிகளாக இருக்கும் அம்பானி – அதானி – மகேந்திரா உள்ளிட்ட எந்த ஒரு பெரும் முதலாளிகளும் சட்ட விரோதமாகவோ தேசவிரோதமாகவோ எந்தவித செய்கையும் செய்து அவர்கள் பொருள் ஈட்ட வில்லை. அரசுக்கு விரோதமாக கள்ளத் தனமாக இந்திய ரூபாய் தாள்களை அச்சிடும் ராஜ துரோகம் செய்து கோடிகளில் புரளும் நபர்கள் இல்லை என்பது பகை நாடான பாகிஸ்தானிற்கு இந்திய ரூபாய் தாள்களை அச்சிடும் இயந்திரத்தை காங்கிரஸ் கட்சியின் இளவரசருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அதானி உள்ளிட்ட எந்த ஒரு பெறு நிறுவனமும் உள்நாட்டிலோ அல்லது வேறு எந்த ஒரு வெளிநாட்டில் இருந்தோ பெரும் செல்வங்களை கொள்ளையடித்து அல்லது அரசாங்கத்திடம் இருந்து அபகரித்து வந்து தொழிலுக்கு முதலீடாக மாற்றவில்லை. அதானி உள்ளிட்ட பெரு நிறுவனங்களில் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களிலும் தொழிற்சாலைகளிலும் பல லட்சம் பேர் வேலை செய்கிறார்கள் . அதன் மூலம் அவர்கள் அத்தனை பேரின் குடும்பமும் நிரந்தரமான வாழ்வாதாரம் பெறுகிறது. இந்த நிறுவனங்கள் தொழிற்சாலைகள் வியாபார வர்த்தக வளாகங்கள் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் எத்தனையோ சிறு குறு வேலை வாய்ப்புகளும் சிறு தொழில் முனையும் வாய்ப்புகளும் கிடைக்கப் பெறுகிறது. அதன் மூலம் நேரடியாக மறைமுகமாக வேலை வருமான வாய்ப்பு வாழ்வாதாரமும் பெறுபவர்கள் பல கோடி பேர் இருப்பார்கள்.

இந்த நிறுவனங்கள் இவர்களின் உற்பத்தி நுண்ணறிவு சார்ந்த தொழில் வியாபாரம் காரணமாக மனித வளங்கள் ஏராளமாக பயன்படுத்தப்படும். இந்த மனித வளங்களுக்கு தேவையான இதர உணவு உடை போக்குவரத்து உள்ளிட்டவற்றில் பங்களிப்பு வழங்குவதன் மூலம் எத்தனையோ பேர் வருமானமும் வாழ்வாதாரமும் பெறுவார்கள். அவ்வகையில் அம்பானி அதானி உள்ளிட்ட பெரு நிறுவன முதலாளிகள் தாங்கள் செய்யும் தொழிலின் மூலம் நேரடியாக ஆயிரம் பேரை வாழ வைத்தால் மறைமுகமாக நான்காயிரம் குடும்பத்திற்கு வாழ்வளிப்பார்கள். இந்தப் பெரும் நிறுவனங்கள் அதன் மூலம் கிடைக்கப்படும் வேலை வாய்ப்புகள் இந்த தேசத்தின் பொருளாதாரம் வளர்ச்சிக்கும் தனிமனித வருமான வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பை வழங்குகிறது . மத்திய அரசாங்கத்தால் நேரடியாக முழுமையான முதலீடு செய்ய முடியாத இடங்களில் எல்லாம் மத்திய அரசின் பிரதிநிதிகளாக இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக பெரிய அளவில் முதலீடுகளை செய்ய முன்வருபவர்கள் இந்த பெரும் முதலாளிகள் தான் .

நீண்ட தூர சாலை கட்டுமானங்கள் சாலை விரிவாக்கங்கள் விமான நிலைய விரிவாக்கங்கள் பெரிய அளவிலான கட்டுமானங்கள் என்று அனைத்திலும் இவர்களின் பங்களிப்பு அலாதியானது. சமீப காலமாக தொலைத்தொடர்பு கனிம வளம் உள்ளிட்ட துறையிலும் கூட பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்து இவர்கள் பெரும் பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். நிச்சயம் இதில் எல்லாம் இவர்களுக்கு தொழில்முறை லாபம் உண்டு. அதில் கூடுமானவரை உச்சபட்ச லாபம் பார்ப்பதற்கு முயலும் சூழலும் உண்டு. அதுதான் தொழில் வியாபாரத்தின் தாரக மந்திரம் . நீங்களோ நானோ தொழில் வியாபாரத்தில் இருந்தாலும் கூட கூடுமானவரையில் செலவினங்களை குறைத்து உச்சபட்ச லாபத்தை தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கும். அதுதான் வெற்றிகரமான நிர்வாகத்திற்கும் தொழில் இயக்கத்திற்கும் அடையாளமாக இருக்கும்.

பெரு நிறுவனங்கள் அதன் மூலமாக பொருளாதார பங்களிப்புக்கள் இந்த தேசத்திற்கு நேரடியாக பெரும் பங்களிப்பை வழங்குவதோடு எப்போதெல்லாம் தேசம் பெரிய அளவில் உள்நாட்டு நெருக்கடியிலும் பாதுகாப்பு அச்சுறுத்தலிலும் சிக்கிக் கொள்ளுமோ? அப்போதெல்லாம் தேசத்திற்கு பெரும் துணை நிற்பவர்கள் இந்த பெரும் முதலாளிகள் தான். குறிப்பாக பஞ்சம் புயல் வெள்ளம் அதன் மூலமாக சேதங்கள் ஏற்படும் போது தன்னார்வலர்களாக பாதிக்கப்படும் மக்களுக்கு இவர்கள் வாரி வழங்கும் மனிதாபிமான உதவிகள் ஏராளம். கொரோனா காலத்தில் டாடாவின் ரத்தன் டாடா சுமார் 1500 கோடிக்கும் அதிகமான பொருளாதார பங்களிப்பை கொரோனா கால உதவியாக வழங்கியது. மருத்துவ உபகரணங்கள் உணவுப் பொருட்கள் கொரோனா காலத்தில் தொடர் மருத்துவப் பணியில் இருந்த மருத்துவர் துப்புரவு பணியாளர்களுக்கான உணவு உபசரிப்பு என்று டாட்டா குழுமம் இந்த தேசத்திற்கு வழங்கிய பங்களிப்பு போற்றுதலுக்குரியது.

பூகம்பம் – யுத்தம் – அசாதாரண சூழல் -நோய் தொற்று அபாயம் உள்ளிட்ட எந்த ஒரு நெருக்கடியான நிலையிலும் தேசத்திற்கு வாரி வழங்குவதிலும் பாதிக்கப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் செய்வதிலும் முன்னிற்பது இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். இதில் அவர்களுக்கு கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு தங்களை வாழவைக்கும் நாடு அதன் சக குடிமக்கள். அவர்கள் நெருக்கடியில் இருக்கும் போது அவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை என்ற மனிதாபிமான அடிப்படையில் தான் இந்த பெரும் முதலாளிகள் இப்போது வரையிலும் தேசத்திற்கு அசாதாரண பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். இதில் கார்ப்பரேட் கம்பெனிகள் என்றால் வலம் கொழிக்கும் துறைகளில் மட்டும்தான் முதலீடு செய்வார்கள் என்பதை கடந்து தேசத்தின் நலனுக்காக குறைந்த லாபம் நீண்ட கால முதலீடு தரக்கூடிய துறைகளில் கூட அவர்கள் தேச நலன் கருதி முதலீடு செய்வது அவர்களின் சமூக பொறுப்பிற்கும் தேசிய சிந்தனைக்கும் அடையாளம். ஆனால் தேசம் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் போதெல்லாம் தாங்கள் மட்டும் பதுங்கி பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ராகுலுக்கு இந்த தொழில் சாம்ராஜ்யம் அதன் நிறுவனர்களின் அருமை தெரிய வாய்ப்பில்லை.


Share it if you like it