கோயிலுக்கு சென்ற காரணத்தால் ஒருவரை கட்சியிலிருந்து நீக்கும் காங்கிரஸ் கட்சி சர்ச், மசூதிக்கு செல்பவர்களையும் இதுபோன்று நீக்குமா..? – இந்து முன்னணி !

கோயிலுக்கு சென்ற காரணத்தால் ஒருவரை கட்சியிலிருந்து நீக்கும் காங்கிரஸ் கட்சி சர்ச், மசூதிக்கு செல்பவர்களையும் இதுபோன்று நீக்குமா..? – இந்து முன்னணி !

Share it if you like it

ஜனவரி 22 அயோத்தியில் ஸ்ரீ பால ராமர் சிலை பிராண பிரதிஷ்டை மிக பிரம்மாண்ட முறையில் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்றது. இந்த பிராண பிரதிஷ்டை நிகழ்வில் பல அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும், பேச்சாளர்களும் பங்கேற்றனர். மேலும் பல லட்சம் பக்தர்களும் தரிசனம் செய்தனர். இந்நிலையில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டதற்காக காங்கிரஸ் கட்சியிலிருந்து ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் என்பவர் நீக்கப்பட்டுள்ளதாக இந்து முன்னணி அவர்களுடைய அதிகாரபூர்வ சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக இந்து முன்னணி X பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் என்பவர் அயோத்தி ஸ்ரீ ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட காரணத்தால் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ராமர் கோயிலுக்கு சென்ற காரணத்தால் ஒருவரை கட்சியிலிருந்து நீக்கும் காங்கிரஸ் கட்சி சர்ச், மசூதிக்கு செல்பவர்களையும் இதுபோன்று நீக்குமா..?

https://x.com/hindumunnani_tn/status/1756948416855457845?s=20


Share it if you like it