நீங்கள் சொன்னால் பகுத்தறிவு நாங்கள் சொன்னால் குற்றமா !

நீங்கள் சொன்னால் பகுத்தறிவு நாங்கள் சொன்னால் குற்றமா !

Share it if you like it

சென்னை மயிலாப்பூர் அருகே யாதவ மகா சபை தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. அதன் உரிமையாளர் அந்த அலுவலகத்தின் முன்பு பெயர் பலகை ஒன்றை வைத்துள்ளார். அந்த பெயர் பலகையில் (கடவுள் இல்லை என்பவன் முட்டாள் ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி) என்கிற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் யாதவ மகா சபை தலைமை அலுவலகம் முன்பு வைக்கப்பட்ட பெயர் பலகையை காவல்துறை,வருவாய்த்துறை, மாநகராட்சித்துறை என பல்வேறு துறையை சார்ந்தவர்கள் அகற்றியுள்ள நிகழ்வானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக செய்திக்குறிப்பு ஒன்றை யாதவ மகா சபை தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது :-

20/11/23 காலை 9.30 மணிக்கு யாதவ மகா சபை சார்பாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில், கபாலீஸ்வரரிடம் கோரிக்கை மனு வழங்கும் நிகழ்வுக்கு, ஆண்டவனை வணங்க அன்புடன் அழைக்கிறோம்…


அன்புடையீர் வணக்கம், நம்முடைய யாதவ மகா சபை தலைமை அலுவலகத்தில் இருந்த பெயர் பலகையை 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருவாய் துறை மாநகராட்சித்துறை என பல்வேறு துறையை சார்ந்தவர்கள் (17/11/23) அதிகாலை ஒரு மணிக்கு மேல் யாரும் இல்லாத நேரத்தில் அகற்றினார்கள் என்பது மிகுந்த கண்டனத்திற்குரிய செய்தி !

பெயர் பலகை அகற்ற காரணம் அதில் எழுதப்பட்டிருந்த வாசகம்: (கடவுள் இல்லை என்பவன் முட்டாள் ஆன்மீகம் அறியாதவன் காட்டுமிராண்டி)

நம்முடைய ஆலயங்களுக்கு முன்பாக கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்று கூறிய ஈவேரா ராமசாமி சிலைகளிலும், ஆன்மீகத்திற்கு எதிராக ஈவேரா எழுதிய வாசகமும் எழுதப்பட்டிருப்பது நியாயமா?

ஆனால், நாம் நமது பெயர் பலகையில் “கடவுள் இல்லை என்பவன் முட்டாள்” என்று சொன்னால் தவறு!… இதுதான் ஜனநாயகமா என்பது நம்முடைய கேள்வி?…

யாதவ மகாசபை பெயர் பலகையை எடுத்தது சம்பந்தமாக காவல்துறை அல்லது மாநகராட்சி கமிஷனர் இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை இவர்களிடம் விளக்கத்தை எதிர்பார்க்க இயலாது…

ஆகவே, நவம்பர் 20 ஆம் தேதி தேதி காலை 9.30 மணி அளவில் யாதவ மகா சபை தலைமை அலுவலகம் இயங்கும் No 24 தெற்கு மாட வீதி மயிலாப்பூர் சென்னை (மயிலாப்பூர் இந்து பெனிபிட் ஃபண்ட் ) இடத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட யாதவ மகா சபை மற்றும் இந்து அமைப்பு சார்ந்த நிர்வாகிகள் ஒன்று கூடி அருகில் இருக்கக் கூடிய கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு ஊர்வலமாக சென்று கபாலீஸ்வரர் காலடியில் நமக்கு ஏற்பட்ட அநீதியை கோரிக்கை மனுவாக வைக்க இருக்கிறோம்…

ஆன்மீகத்துக்கு எதிராக இருக்கக்கூடிய திமுக ஆட்சியை விரைவில் வீட்டுக்கு அனுப்ப, அனைவரும் ஒன்று கூடி இறைவனை வேண்ட இருக்கிறோம்…

இந்நிகழ்வில் நட்புக்களும், உறவுகளும்,பொதுமக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு கபாலீஸ்வரர் தரிசிக்க அன்போடு அழைப்பு விடுத்திருக்கிறார் யாதவ மகாசபையின் தேசிய அமைப்பு செயலாளர் குணசீலன்.


Share it if you like it