நாட்டுக் கோழி குழம்பு, வறுவல், சுக்கா, உப்பு கறி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று சீமான் நா.த.க. நிர்வாகிகளுக்கு கட்டளை இட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கன்னியாகுமரியில் பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். சீமானுடன், கட்சியின் மூத்த நிர்வாகிகள், அரசியல் ஆலோசகர், உதவியாளர் மட்டுமின்றி, பாதுகாப்பிற்காக 15க்கும் மேற்பட்ட ‘பவுன்சர்கள் வலம் வருகின்றனர். பிரசாரத்திற்கு செல்வதற்கு முன், அந்தந்த மாவட்டத்தின் முக்கிய நிர்வாகியை, தலைமை அலுவலக நிர்வாகிகள் தொடர்பு கொண்டுள்ளனர்.
சீமான் மற்றும் அவருடன் வருபவர்கள் எங்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு உணவில் என்னென்ன இடம்பெற வேண்டும் என்ற பட்டியலை கொடுத்துள்ளனர். காலை உணவில் பொங்கல், இட்லி, தோசை, பூரி மட்டுமின்றி, சிறுதானியங்களில் தயாரிக்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மதிய உணவில் சாதம், சாம் பார், ரசம், தயிர், இரண்டு வகை காய்கறிகள் இடம் பெற வேண்டும். நாட்டுக் கோழி குழம்பு, வறுவல், சுக்கா, உப்பு கறி ஆகியவற்றில் ஏதாவது ஒன்று கட்டாயம் இடம்பெற வேண்டும்.
பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சோறு தண்ணி இல்லாமல் தேர்தலில் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற வேட்கையோடு மிக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் சீமானோ தேர்தல் நேரத்தில் கூட வாய்க்கு சொரணையாக நாட்டு கோழி வேண்டும் சிக்கன் வேண்டும் என்று கட்டளை போடுகிறார்.
எப்படியும் நாம் தமிழர் கட்சிக்கு யாரும் வாக்களிக்க போவதில்லை. எதற்காக வீண் பிரச்சாரம் செய்ய வேண்டும். நன்றாக வயிறு முட்ட முட்ட சாப்பிட்டுவிட்டு பத்திரிகையாளர்களிடம் நாம் தமிழர் கட்சி மாபெரும் வெற்றி பெரும் என்று சப்பை கட்டு கட்டிவிட்டு, நகைச்சுவை என்ற பெயரில் புஹாஹா என்று சிரித்துவிட்டு வீட்டில் குறட்டை விட்டு தூங்கலாம் என்று சீமான் நினைத்துள்ளார் என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.