எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்ட இசைஞானி இளைய ராஜாவிற்கு இந்தியாவை கடந்து உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வண்ணம் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டம், விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களில் 12 பேரை தேர்ந்தெடுத்து ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த ‘மேஸ்ட்ரோ’ பட்டம் வென்ற இசைஞானி இளையராஜா ராஜ்யசபா எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து, மாநிலங்களவை உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் தமிழில் உறுதி மொழி செய்து எம்.பி.யாக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, அவர் கூறியதாவது;
மாநிலங்களவை உறுப்பினராக, நியமிக்கப்பட்டிருக்கும் இளையராஜா எனும் நான். சட்டத்தினால், நிறுவப்பட்டதுமான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும் பற்றுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி இருப்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் கடவுளின் பெயரால் ஆணையிட்டுக் கூறுகிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.
இதையடுத்து, இளையராஜாவுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைத்துறையினரும், பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். கடவுளின் பெயரால் ஆணையிட்டுக் கூறுகிறேன் என இளைய ராஜா கூறி இருப்பதன் மூலம் தமிழகம் என்றும் ஆன்மீக மண் என்பது மீண்டும் ஒருமுறை நிருபணம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.