சின்னத்திரை நடிகை ஷர்மிளா மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசை ஞானிக்கு எதிராக தங்களது வன்மத்தை வெளிப்படுத்தி இருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இசைஞானி இளையராஜாவின் திறமை மற்றும் அவரது உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் மத்திய அரசின் பரிந்துரையின் பெயரில் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல, கேரள மாநிலத்தை சேர்ந்த முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா உட்பட மேலும் இருவருக்கு நியமன எம்.பி பதவி வழங்கப்பட்டு கெளரவ படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
சட்டம், விளையாட்டு, சமூக சேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 12 நபர்களை தேர்வு செய்து ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த ‘மேஸ்ட்ரோ’ பட்டம் வென்ற இசைஞானிக்கும் ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.
இதனை தொடர்ந்து, இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்களும், பாராட்டுகளும் இளைய ராஜாவிற்கு குவிந்த வண்ணம் இருக்கிறது. இதனிடையே, வி.சி.க.வின் மூத்த தலைவரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமாக இருப்பவர் எஸ்.எஸ். பாலாஜி. இவரின், மனைவியும் சின்னத்திரை நடிகையுமான டாக்டர். ஷர்மிளா தனது ட்விட்டர் பதிவில், இளைய ராஜா பா.ஜ.க.வின் சின்னமான தாமரை மலரை தனது கையில் ஏந்திய படி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வது போல ஒரு கார்ட்டூனை வெளியிட்டு இருக்கிறார். அதாவது, இசைஞானி பா.ஜ.க.வின் ஆதரவாளர் போலவும் அதற்காக மட்டுமே அவருக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டு இருப்பது போல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதே போல, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா! என்பது போல தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார். இதில், பலரும் இளைய ராஜாவை விமர்சனம் செய்து இருக்கின்றனர். தன் திறமைக்கு கிடைத்த அங்கீகாரத்தை கூட இவர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை என்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.