ஜப்பான் மாஜி பிரதமர் அபே துப்பாக்கியால் சுட்டுக் கொலை!

ஜப்பான் மாஜி பிரதமர் அபே துப்பாக்கியால் சுட்டுக் கொலை!

Share it if you like it

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஜப்பான் பிரதமராக நீண்டகாலம் இருந்தவர் ஷின்சோ அபே. 2006-ம் ஆண்டு முதன் முதலாக ஜப்பான் பிரதமரான அபே, உடல்நலக் குறைவால் ஓராண்டிலேயே பதவி விலகினார். பின்னர், 2021-ம் ஆண்டு மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், 2020-ம் ஆண்டுவரை பிரதமராகவே நீடித்தார். எனினும், 2020-ம் ஆண்டும் மீண்டும் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி பதவி விலகினார். இந்த சூழலில், ஜப்பான் நாட்டின் அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டு, அந்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தவகையில், அபேவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதனிடையே, ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவைக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணியளவில் அந்நாட்டின் நாரா என்ற நகரில் ரயில் நிலையத்துக்கு வெளியே சாலையோரத்தில் மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருந்தார் அபே. அப்போது, கூட்டத்திலிருந்த மர்ம நபர் ஒருவர் ஷின்சோ அபேவை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் மார்புப் பகுதியில் குண்டு பாய்ந்த நிலையில், மேடையிலேயே மயங்கி விழுந்தார் அபே. அவரை ஹெலிகாப்டர் மூலம் நாரா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் உயரிழந்து விட்டார்.

ஷின்சோ அபேவுக்கு தற்போது 67 வயது. இவரை சுட்டதாக நாரா நகரைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க டெட்சுயா யமகாமி என்பவரை கைது செய்திருக்கிறார்கள். இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர் என்று கூறப்படுகிறது. அபேவை சுட்டு இவர், அங்கிருந்து தப்பிச் செல்ல முயலாமல், துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு, பாதுகாப்பு அதிகாரிகளிடம் சரணடையும் நோக்கத்தில் அங்கேயே நின்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் என்ன காரணத்திற்காக அபேவை சுட்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த அந்நாட்டின் பிரதமர் புமியோ ஷிடா, உடனடியாக தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டு தலைநகர் டோக்கியோவுக்கு புறப்பட்டுச் சென்று விட்டார்.

இதனிடையே, ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே சுடப்பட்ட தகவல் அறிந்ததும், தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார் பாரத பிரதமர் நரேந்திர மோடி. இதுகுறித்த தனது ட்விட்டர் பதிவில், “எனதருமை நண்பர் அபே ஷின்சோ மீதான தாக்குதலால் மிகவும் வேதனையடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவருடனும், அவரது குடும்பத்தினருடனும், ஜப்பான் மக்களுடனும் உள்ளன” என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Share it if you like it