அமைதி பூங்காவான தமிழகத்தில் சட்ட விரோத வெடிபொருட்கள் வலம் வருகிறது – நாராயணன் திருப்பதி கண்டனம் !

அமைதி பூங்காவான தமிழகத்தில் சட்ட விரோத வெடிபொருட்கள் வலம் வருகிறது – நாராயணன் திருப்பதி கண்டனம் !

Share it if you like it

தருமபுரியில் இருந்து கோவைக்கு லாரியில் சட்ட விரோதமாக வெடி பொருட்கள் கடத்தி சென்றவர்களை காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த கடத்தலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி. இதுதொடர்பாக அவர் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது :-

நேற்று முன்தினம் அதிகாலை, தர்மபுரியிலிருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியில் மறைத்து வைத்திருந்த மரப்பெட்டிகளில் 2.5 டன் எடையுள்ள வெடி பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்களை மீட்டுள்ளது சேலம் காவல்துறை. இந்த வாகனத்தை செலுத்திய ஓட்டுநர் இளையராஜா கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சட்ட விரோதமாக இந்த பொருட்கள் எடுத்து செல்லப்பட்டதாலேயே ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

துரிதமாக நடவடிக்கை எடுத்த சேலம் காவல்துறையினரை பாராட்ட நாம் கடமைப்பட்டிருக்கும் அதே வேளையில், இவ்வளவு வெடி பொருட்களை தைரியமாக தமிழகத்தில் கடத்தும் நிலை வந்துள்ளது கவலைக்குரியது. குறிப்பாக கடந்த வருடம், அக்டோபர் 23ம் தேதியன்று கோவையில் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் அருகே குண்டு வெடித்து ஜமிசா முபீன் என்ற இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதி உயிரிழந்தது இன்றளவும் கோவை நகரை பதட்டத்தில் வைத்துள்ள நிலையில், அதே கோவைக்கு இந்த வாகனம் சென்று கொண்டிருந்தது அதிர்ச்சியளிக்கிறது. காலம் தாழ்த்தாமல் , காவல்துறையினர் இந்த வெடிபொருட்களை சட்ட விரோதமாக எடுத்து செல்ல முயன்ற கும்பலை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைதி பூங்காவான என அழைக்கப்படும் தமிழகத்தில் சட்ட விரோத வெடிபொருட்கள் வலம் வருவது கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு நாராயணன் திருப்பதி குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it