சட்ட விரோத பணப்பரிவர்த்தனை விவகாரம் : திமுக அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் !

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை விவகாரம் : திமுக அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் !

Share it if you like it

கடந்த ஜூலை மாதம் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகிய இடங்களிலும், அமைச்சரின் வீட்டு வாசலில் இருந்த கார்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். துணை ராணுவப்படையினர் சோதனை நடைபெற்ற இடங்களில் குவிக்கப்பட்டனர். வங்கி அதிகாரிகள் அழைத்து வரப்பட்டு, அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரவு செலவு சரிபார்க்கப்பட்டது.

இதற்கிடையே அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், சிமெண்ட் கிடங்குகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் வெவ்வேறு இடங்களில் சுமார் 11.48 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த பணம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப் பதுக்கி வைத்திருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் விசாரணைக்கு தி.மு.க., எம்.பி., கதிர் ஆனந்திற்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், தற்போது நவ.,30ம் தேதி ஆஜராக அவரது தந்தையும், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.


Share it if you like it