கிர்கிஸ்தான் நாட்டை சேர்ந்த மதகுரு இஸ்லாமிய பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் தெரிவித்து இருக்கும் கருத்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்திய ஆசியாவின் மலைகளால் சூழப்பட்ட நாடாக இருப்பது கிர்கிஸ்தான். வடக்கே கஜகஸ்தான், மேற்கில் உஸ்பெகிஸ்தான், தெற்கில் தஜிகிஸ்தான் மற்றும் கிழக்கில் சீனாவை தனது எல்லைகளாக கொண்ட நாடு. இதன், தலைநகரமாக பிஷ்கெக் இருந்து வருகிறது. இது, பெரும்பான்மையாக இஸ்லாமியர்களை கொண்ட நாடாக இருந்து வருகிறது.
கிர்கிஸ்தான் மக்களிடையே நன்கு அறியப்பட்ட மதகுருவாக பார்க்கப்படுபவர் டூலோவ் 53. இஸ்லாமிய மக்களுக்கு நற்போதனைகளை வழங்குவதாக கூறி, அவ்வப்பொழுது ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்கி கொள்வதை வாடிக்கையாக கொண்டவர். இவர், சிறந்த மதகுரு என்ற விருதை பெற்றவர் என்று கூறப்படுகிறது. இதுதவிர, இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர். இவரது, கருத்துக்களை வேதவாக்காக நம்பும் அப்பாவி மக்களுக்கும் இருந்து வருகின்றனர்.
அந்த வகையில், தலைநகர் பிஷ்கெக்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இமாம் சதிபகாஸ் டூலோவ் மக்களிடையே உரையாற்றிக் கொண்டு இருந்த பொழுது இவ்வாறு பேசி இருக்கிறார்; நாட்டில் இறைச்சியின் விலை உயர்ந்து வருவதற்கு பெண்களின் தொடைகளே காரணம் என்று சர்ச்சைக்குறிய வகையில் பேசி இருக்கிறார்.
காலம், எவ்வளவு வேகமாக சென்றுக் கொண்டு இருக்கும் இவ்வேளையில், இதுபோன்று அபத்தமாக பேசும் இஸ்லாமிய மதகுருமார்களிடம் இருந்து அப்பாவி இளைஞர்கள் சற்று விலகியே இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன் லிங்க் இதோ.