தி.மு.க மற்றும் இடதுசாரிகள், குறித்து பல்கலை கழகப் பாடப் புத்தகத்தில் தவறான கருத்துகள் இடம் பெற்று உள்ளன. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்ட சில புள்ளி விவரங்களை பாடப் புத்தகத்தில் இருந்து பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் படித்து காண்பித்து உள்ளார் அவர் கூறியதாவது.
இந்திய கட்சிகள் குறிப்பாக மதங்களுக்கு எதிரான தி.மு.க, பொதுவுடைமைக் கட்சிகள் மக்களை வாக்கு வங்கிகளாக மாற்றி வருகின்றன. அந்தக் கட்சிகள் அந்த மக்களை தேசியப் பாதையில் கலந்துவிடாமல் தடுக்கின்றன. அவை கண்மூடித்தனமாகச் சிறுபான்மையினரை ஆதரிக்கின்றன. என்று அச்சிடப்பட்டுள்ளது. இது சமூக அறிவியல் வரலாறு பாடப் புத்தகத்தில் வரவேண்டிய பாடமா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்.