ராணுவ தகவல்கள் பாக்.கிற்கு விற்பனை: விமானப்படை அதிகாரி கைது!

ராணுவ தகவல்கள் பாக்.கிற்கு விற்பனை: விமானப்படை அதிகாரி கைது!

Share it if you like it

இந்திய ராணுவத்தின் முக்கியத் தகவல்கள் மற்றும் ஆவணங்களை பாகிஸ்தானுக்கு விற்பனை செய்த விமான படை அதிகாரியை போலீஸார் கைது செய்தனர்.

தலைநகர் டெல்லியிலுள்ள இந்திய விமானப்படை பதிவேடு அலுவலகத்தில் நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்தவர் தேவேந்தர் நாராயணன் சர்மா. 32 வயதாகும் இவரிடம், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உளவாளி, சமூக வலைத்தளம் மூலம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். பின்னர், இருவரும் சமூக வலைத்தளம் மூலம் பழகி வந்தனர். அப்போது, ஆசைவார்த்தைகள் கூறி சர்மாவை தனது வலையில் வீழ்த்தி இருக்கிறார் அந்தப் பெண். ‘மாது’ மயக்கத்தில் இருந்த அவரிடம், இந்திய விமானப்படை அதிகாரிகள் பணியாற்றும் இடங்கள், ரேடார்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்கள் மற்றும் பாதுகாப்பு நிலையங்கள் போன்ற தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்ட முக்கியமான ரகசிய தகவல்களை அந்த பெண் உளவாளி கேட்டிருக்கிறார். பெண் ஆசையும், பொன் ஆசையும் யாரை விட்டது. மேற்கண்ட தகவல்களை கம்ப்யூட்டரில் இருந்தும், ஃபைல்களில் இருந்தும் எடுத்த தேவேந்தர் நாராயணன் சர்மா, அவற்றை ‘வாட்ஸ் ஆப்’ மூலம் அப்பெண்ணுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இதற்கு கைமாறாக சர்மா மனைவியின் வங்கிக் கணக்கில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து கோடிக் கணக்கில் பணம் போட்டிருக்கிறது.

இந்த தகவல்கள் எப்படியோ வெளிச்சத்துக்கு வந்து விட்டது. இதையடுத்து, தேவேந்தர் நாராயணன் சர்மா வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டிலிருந்து ராணுவ ரகசியங்களை அனுப்ப பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், மின்னணு சாதனங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல, கடந்த 6 மாதங்களாக அந்தப் பெண்ணுக்கு ரகசிய தகவல்களை சர்மா அளித்து வந்ததாகத் தெரிகிறது. அந்த பாகிஸ்தான் பெண் உளவாளி, சர்மாவிடம் ரகசியங்களை கறப்பதற்கு இந்திய சிம்கார்டைத்தான் பயன்படுத்தி இருக்கிறார். ஆனால், தகவல்கள் அனைத்தும் பெற்ற பின்னர், அந்த சிம் கார்டை செயலிழக்கச் செய்து விட்டார். இதைத் தொடர்ந்து, அரசாங்க ரகசிய சட்டத்தின் கீழ் சர்மா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து, சர்மா பணிநீக்கம் செய்யப்பட்டார். அவரிடம் ராணுவ உளவுப்பிரிவினரும், டெல்லி போலீஸாரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் கடந்தாண்டு ஜூலை மாதம் ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு அளித்ததாக ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it

One thought on “ராணுவ தகவல்கள் பாக்.கிற்கு விற்பனை: விமானப்படை அதிகாரி கைது!

  1. இன்னுமா இப்படி நடக்கின்றது…… வெளியே வராதபடி முழு சிறைவசம் செய்யுங்கள்… இவன் தான் முதல் தேச துரோகி! பாகிஸ்தான் பிச்சை எடுதாலும் இந்த மாதிரியான வேலையை கைவிடுவதில்லை🙉🙉

Comments are closed.