எல்லையில் செல்போன் டவர்: மீண்டும் வாலாட்டும் சீனா!

எல்லையில் செல்போன் டவர்: மீண்டும் வாலாட்டும் சீனா!

Share it if you like it

இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா செல்போன் டவர்களை அமைத்து வருவதில், ஏதோ சதித்திட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்தியாவின் லடாக் மாநிலத்தின் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அடிக்கடி வாலாட்டி வருகிறது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காக் ஏரி உள்ளிட்ட 4 பகுதிகளில் கடந்த 2020-ம் ஆண்டு சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதை தடுத்த இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியது. இதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறித்து அந்நாடு வெளியிடவில்லை.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா – சீனா இடையே 15-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தை நடந்து விட்டது. ஆனால், இதுவரை சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. இந்த சூழலில், பாங்காக் ஏரி பகுதியில் பாலம் கட்டத் தொடங்கியது சீனா. இப்பணி நிறைவடைந்த நிலையில், தற்போது செல்போன் டவர் அமைக்கும் பணியை தொடங்கி இருக்கிறது சீனா. எல்லைக் காட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் இருக்கும் சுசுங் என்ற பகுதியில் 3 செல்போன் டவர்களை அமைத்து வருகிறது சீனா.

இந்த செல்போன் டவர்தான் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது. ஏதோ சதித்திட்டம் தீட்டும் நோக்கில் இந்த செல்போன் டவரை சீனா அமைக்கிறதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. காரணம், சீன ஆப்கள் மூலம் இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் இருக்கும் பயனாளிகள் பற்றிய தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து சீனா ஆப்களுக்கு (செயலிகளுக்கு) தடை விதித்து வருகிறது மத்திய அரசு. மேலும், பல ஆப்களுக்கும் தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. எனினும், சீனா செல்போன் டவர்களை அமைத்து வரும் விவகாரத்தை எளிதாக கடந்து செல்ல முடியாது. ஆகவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்து வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் விருப்பம்.


Share it if you like it