அபுதாபி ஸ்டைலில் இந்தியா மீது அட்டாக்? பாகிஸ்தான் ட்ரோன் வாங்கிய மர்மம்!

அபுதாபி ஸ்டைலில் இந்தியா மீது அட்டாக்? பாகிஸ்தான் ட்ரோன் வாங்கிய மர்மம்!

Share it if you like it

சீனாவிடமிருந்து ஆளில்லா குட்டி விமானங்களை பாகிஸ்தான் வாங்கியிருப்பது, அபுதாபி ஸ்டைலில் இந்தியா மீது தாக்குதல் நடத்துவதற்கான சதித் திட்டமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. பெட்ரோல் சேகரித்து வைக்கப்படும் ஆயில் டேங்கர்கள் மற்றும் அபுதாபி விமான நிலையம் மீது ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் நடத்தப்பட்ட இத்தாக்குதலில், 2 இந்தியர்கள் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களே காரணம் என்பது தெரியவந்திருக்கிறது. இத்தாக்குதலுக்கு சவுதி அரேபியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. அதேபோல, அபுதாபி தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சையது தெரிவித்திருக்கிறார். மேலும், தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்கள் குடும்பத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில்தான், ஆளில்லா குட்டி விமானமான ட்ரோன்களை சீனாவிடமிருந்து வாங்கி இருக்கிறது பாகிஸ்தான். இதன் மூலம் அபுதாபி ஸ்டைலில் இந்திய எல்லைக்குள்ளும் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சதித் திட்டம் தீட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தகவலறிந்த இந்திய உளவுத்துறை, எல்லை பாதுகாப்புப் படையினரை உஷார்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, பாதுகாப்புப் படைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறது இந்திய ராணுவம். தவிர, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் பறக்கும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தவும் ராணுவத்துக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.


Share it if you like it