இன்னும் 20-30 வருடம் பா.ஜ.க.தான்: பிரசாந்த் கிஷோர் தடாலடி!

இன்னும் 20-30 வருடம் பா.ஜ.க.தான்: பிரசாந்த் கிஷோர் தடாலடி!

Share it if you like it

இன்னும் 20 – 30 ஆண்டுகளுக்கு பா.ஜ.க.தான் வலிமை மிகுந்த தேர்தல் சக்தியாக இருக்கும் என்று அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவை பொறுத்தவரை, தற்போதைய நிலவரப்படி பிரபலமான தேர்தல் வியூக வகுப்பாளராக இருப்பவர் பிரசாந்த் கிஷோர்தான். பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டவர். 2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு அரசியல் ஆலோசகரானக இருந்து, ஸ்டாலினை முதல்வர் பதவியில் அமர வைத்ததும் இவர்தான் என்பது பரவலான கருத்து. இதற்காக, பிரசாந்த் கிஷோருக்கு 380 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேசமயம், பிரசாந்த் கிஷோர் மீது இன்னொரு விமர்சனமும் உண்டு. அதாவது, தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை கணித்து வைத்துக் கொண்டு, அக்கட்சிக்கு பணியாற்றுவார் என்கிற கூற்றும் உண்டு. ஏனெனில், தமிழகத்தில் பிரசாந்த் கிஷோரை முதலில் நாடியது அ.தி.மு.க.தான். அதன்பிறகு, கமல் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிரசாந்த் கிஷோரின் ஆட்கள் சில நாட்கள் கமலுக்காக தேர்தல் பணியாற்றியதாகவும் தகவல் வெளியானது. ஆனால், தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு எதிராக அலை வீசுவதால், தி.மு.க.தான் வெற்றிபெறும் என்பதை முன்பே கணித்து விட்டார் பிரசாந்த் கிஷார். ஆகவே, தி.மு.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டதும் அதை தட்டாமல் ஏற்றுக் கொண்டதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக அவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், திடீரென இந்த வாய்ப்பை மறுத்து பிரசாந்த் கிஷோர் விலகி விட்டார். காரணம், இந்தியாவில் இன்னும் மோடி அலை வீசிக்கொண்டுதான் இருக்கிறது. ஆகவே, 2024 தேர்தலிலும் பா.ஜ.க.தான் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்பதை பிரசாந்த் கிஷோர் உணர்ந்து கொண்டார். ஆகவேதான், வான்ட்டடாக வந்த வாய்ப்பை நிராகரித்தார்.

இதையடுத்து, பிரசாந்த் கிஷோர் தனியாக அரசியல் கட்சி தொடங்கப் போவதாக பரபரப்பாக பேசப்பட்டது. இதை மெய்ப்பிக்கும் வகையில், பிரசாந்த் கிஷோரும் மக்களிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் பலவீனமாக இருப்பதால் மேற்குவங்கம், தெலங்கானா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து 3-வது அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பிரசாந்த் கிஷோர் கட்சியும் இணையும் என்று கூறப்பட்டது. ஆனால் பிரசாந்த் கிஷோரோ, இப்போதைக்கு கட்சி தொடங்குவதற்கான எண்ணம் இல்லை. பூஜ்ஜியத்தில் இருந்து நான் தொடங்க விரும்புகிறேன். ஒருவேளை எதிர்காலத்தில் கட்சி தொடங்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில்தான், தற்போதைய அரசியல் சூழல், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின்  நிலவரம் குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பிரசாந்த் கிஷோர், “இந்திய அளவில் நீங்கள் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று விட்டால் உங்களை யாராலும் அசைக்க முடியாது. ஆனால், இது ஒன்றும் தானாக நிகழ்ந்து விடாது. வருங்காலத்தில் பா.ஜ.க. வலிமை மிகுந்த தேர்தல் சக்தியாக இருக்கும். சுமார் 40 – 50 ஆண்டுகாலம் எப்படி காங்கிரஸ் கட்சியை சுற்றியே இந்திய அரசியல் இருந்ததோ, அதேபோல அடுத்து வரும்  20 – 30 ஆண்டுகள் இந்திய அரசியல் பா.ஜ.க.வை சுற்றியே இருக்கும்” என்று கூறியிருக்கிறார். ஆக, இந்தியாவில் இன்னும் 30 ஆண்டுகளுக்கு பா.ஜ.க. ஆட்சிதான் இருக்கும் என்பது பிரசாந்த் கிஷோரின் பேட்டியிலிருந்து புலனாகிறது.


Share it if you like it

One thought on “இன்னும் 20-30 வருடம் பா.ஜ.க.தான்: பிரசாந்த் கிஷோர் தடாலடி!

  1. இந்த ஆள் சொல்லுவதை நம்பி பஜகாவினர் சும்மா இருந்து விடவேண்டாம்….. ஆட்சியை தக்க வைக்க அயராது பாடுபடுங்கள்… PK பேசுவதெல்லாம் வஞ்ச புகழ்ச்சி. கவனம்.

Comments are closed.