இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 சதவீதம் எம்எஸ்எம்இ-களின் பங்கு உள்ளது எனக் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் புத்தொழில் நிறுவனம் மற்றும் எம்எஸ்எம்இ உச்சிமாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் உரையாற்றினார்.
கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர்,
மனிதகுலத்தில் ஆறில் ஒரு பங்கினரைத் தாயகமாகக் கொண்ட இந்தியா, ஜனநாயகத்தின் தாய், பழமையான ஜனநாயகம், துடிப்பான ஜனநாயகம், செயல்பாட்டு ஜனநாயகமாகும். ஜனநாயக நடைமுறை மூலம் திரௌபதி முர்மு நாட்டின் முதல் குடிமகளாக இருப்பது நமது அதிர்ஷ்டம் ஆகும்.
நமது பொருளாதாரம் நேர்மறையான மாற்றத்தில் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. இது ஒரு பெரிய மாற்றம், ஒரு இனிமையான மாற்றம். நல்ல காரணிக்கு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை செய்துள்ளன.
இதன் விளைவாக நாம் ஏற்கனவே 5-வது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கிறோம். அடுத்த 2-3 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் நாம் முன்னே சென்று கொண்டிருக்கிறோம்.
சமீபத்திய ஆண்டுகளில், வெற்றிகரமான புத்தொழில் நிறுவனங்கள் சூழல் அமைப்பு மற்றும் ஏராளமான வெற்றிகரமான முயற்சிகள் காரணமாக புதுமை மற்றும் தொழில்முனைவோருக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
துடிப்பான எம்.எஸ்.எம்.இ துறையின் மூலம் உள்நாட்டில் வேரூன்றி வரும் தொழில்முனைவோர் கலாச்சாரத்தை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைப்புகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும்.
இந்தியாவில் 30 சதவீத எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உள்ளன. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 45 சதவீதம் எம்எஸ்எம்இ-களின் பங்காகும். இவை 11 கோடிக்கும் அதிகமான தனிநபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகின்றன.
மிக முக்கியமாக, இது பொருளாதாரத்தின் வளர்ச்சிக்குப் பங்களிக்கும் சிறந்த அறிவை உருவாக்கும் ஒரு பகுதியாகும். உறுதியான ஆளுகை, எளிதான வர்த்தகக் கொள்கைகள், முன்முயற்சிகள் ஆகியவை தொழில்முனைவு மற்றும் புதுமை உணர்வு ஆகியவற்றின் செழிப்புக்கு உதவியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.