காப்பீடு செய்வதற்கு சிறந்த நிறுவனம் எது என்பது பற்றிய ஒரு அலசல் ரிப்போர்ட் இது.
இந்திய மக்களின் மனதில் காப்பீடு என்றாலே சட்டென நினைவுக்கு வருவது எல்.ஐ.சி.தான். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு பல வருடங்களாக நாட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறது. ஏராளமானோர் இந்நிறுவனத்தின் ஏஜென்ட்டாக இருந்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் பல நல்ல மாற்றங்களையும், முன்னேற்றத்தையும், நிம்மதியான ஓய்வூதிய காலத்தையும் எல்.ஐ.சி. நிறுவனம் தந்திருக்கிறது என்றால் மிகையாகாது.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் நம் நாடடில் பல நூறு நிறுவனங்கள் காப்பீட்டுத் துறையில் கால்பதித்து பலவிதமான சேவைகளை வழங்கி வருகின்றனர். எனினும், எல்.ஐ.சி.தான் இங்கு ஆல் இன் ஆல் அழகுராஜா. காலமாற்றத்தின் தேவைக்கேற்ப நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இந்தத் துறையில் பலவிதமான சேவைகள் வந்திருக்கின்றன. மத்திய மோடி தலைமையிலான அரசாங்கம் இதை சிறந்த முறையில் நாட்டு மக்களுக்கு பயன்படும் வகையில், அனைத்து ஏழை எளிய மக்களுக்கு 5 லட்சம் இலவச காப்பீடு வழங்கி இருக்கிறது. இது இந்த கோவிட் காலங்களில் பல மக்களுக்கு நன்மை அளித்திருக்கிறது.
மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளும் பயன் பெறும் வகையில் அனைத்து விதமான விவசாயப் பணிகளுக்கும் விரிவு செய்திருக்கிறது எல்.ஐ.சி. நிறுவனம். தாங்கள் பயிரிட்ட பயிருக்கு ஏற்ற மற்றும் காலத்திற்கு ஏற்ப காப்பீடுகளை அறிமுகம் செய்து லட்சக்கணக்கான விவசாயிகளை பேரிடர் காலங்களில் காப்பாற்றி இருக்கிறது. இன்றைக்கு எல்.ஐ.சி.யில் பாலிசிதார்களாக இருக்காதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சியை அடைந்திருக்கிறது எல்.ஐ.சி. நிறுவனம். இதன் பங்குகள் இன்று உச்சத்தில் இருக்கின்றன. இதன் பங்கில் 3.5 சதவிகிதத்தை விற்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, காப்பீட்டின் தேவை அனைத்துத் துறைகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல கோடி ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் இதனால் பயன் பெற்று வருகிறார்கள். எனினும், முதலீட்டாளர்கள் மிகுந்த கவனத்துடன் தங்களின் தேவைக்கேற்ப சட்ட திட்டங்களை நன்கு படித்த பிறகும், சாதக பாதகங்களை புரிந்து கொண்டும் காப்பீடுகளை எடுத்து பயன் பெறலாம். மேலும், இந்நிறுவன பங்குகள் பொதுவாக 8 முதல் 12 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. பங்குச் சந்தையில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள், இந்த காப்பீட்டுத் துறையில் முதலீடுகளை மேற்கொள்ளலாம். அதேசமயம், ஆண்டு நிதிநிலை அறிக்கையை நன்கு ஆராய்ந்து நல்ல நிறுவனங்களின் பங்குகளை வாங்குவது நன்மை பயக்கும்.