தமிழகத்தில் சீன ஆதிக்கம்… ஷாக் ரிப்போர்ட்?!

தமிழகத்தில் சீன ஆதிக்கம்… ஷாக் ரிப்போர்ட்?!

Share it if you like it

தமிழகத்தில் சமீபகாலமாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் மட்டுமே வலம் வந்த இக்காலாசாரம் தற்போது தொலைக்காட்சி வாயிலாகவும் ஊடுருவி இருப்பதுதான் கவலையளிப்பதாக இருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய சமூக ஆர்வலரும், தேசியவாதியுமான ஒருவர், “இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல் இருந்து வருகிறது. 2020-ம் ஆண்டு லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேரை சுட்டுக் கொன்றது சீனா. இதனால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் சீனாவின் துதி பாடிவருகிறார்கள். ஆரம்பத்தில் சமூக வலைத்தளங்களில் மட்டுமே இருந்து வந்த இந்த துதிபாடுதல் தற்போது தொலைக்காட்சி வாயிலும் நடந்து வருகிறது. இதன் மூலம் இந்திய அரசுக்கு தாங்கள் எப்போதும் எதிரானவர்கள் என்பதை தமிழ்நாடு சொல்லாமல் சொல்கிறதோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

விஷயம் இதுதான்… கடந்த சில  வருடங்களாகவே சீன பெண்கள் சிலர் சமூக ஊடகங்களில் தமிழ் பேசும் சீனப்பெண், தமிழில் சீன உணவு வகைகள், தமிழில் சீன ஏற்றுமதி வணிகம், தமிழில் சீன கலாசாரம் என்று சமூக ஊடகங்களில் உலா வந்த வண்ணம் இருக்கிறார்கள். இது சில சமயங்களில் வைரலான செய்திகளாகவும் இருந்திருக்கின்றன. அந்த வகையில், தற்போது சில மாதங்களாக தமிழகத்தின் முக்கிய ஒளிபரப்பு ஊடகமான தந்தி டி.வி.யில் சீன கலாசாரத்தை ஒளிபரப்பு செய்து வருகின்றனர். தினமும் மாலை 6.40 லிருந்து 6.55 வரை சீன செய்திகள் என்கிற தலைப்பில் இச்செய்தியை ஒளிபரப்பு செய்கிறது. இவை பெரும்பாலும் சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, சீன ஊடகங்களால் தயாரிக்கப்பட்டவைதான்.

இதில், சீன கலாசாரம், சீன பொருளாதாரம் சீன அரசியல், சீன ஆராய்ச்சிகள், சீன கல்வி, சீன விளையாட்டுகள், சீன பொழுதுபோக்குகள் என பல்வேறு செய்திகள் இடம் பெறுகின்றன. சரி, சீன விஷயங்கள் தமிழர்களுக்கு எதற்கு? இதை நாம் ஏன் பார்க்க வேண்டும்? இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? இதனால் தமிழர்களுக்கு என்ன பயன்? என்று கேள்வியை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், எல்லாவற்றும் பதில் தேவையில்லை என்பது மட்டுமே. அதேசமயம், இதன் பின்னணியை யோசித்தால் நமக்கு கடும் அதிர்ச்சி காத்திருக்கிறது என்பதே நிஜம். ஏனெனில், இது ஒரு உளவியல் ரீதியான போர். பிற நாட்டு ஊடகங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அந்நாட்டுக்கு எதிராக திருப்பிவிடும் சூழ்ச்சியும் இதில் அடங்கி இருக்கிறது.

இதற்காக சி.எம்.ஜி. என்கிற சீன நிறுவனம் பல கோடி ரூபாய்களை செலவு செய்கிறது. இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளில் நன்கொடை செய்தி தொகுப்பு என்கிற பெயரில் ஊடகங்களில் உள்நுழைந்து வருவதோடு, சமூக ஊடகங்களிலும் சில நபர்களை விளம்பரத் தூதர்களாக நியமித்து சீன செய்திகளை உலாவரச் செய்கிறது. இது நமக்கு மிகவும் ஆபத்தானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது எதிர்வரும் காலங்களில் உளவியல் ரீதியாக நம் நாட்டு மக்களை அச்சுறுத்தும் வகையில் அமைந்து விடும். மேலும், நமது கலாசாரத்தை சீரழித்து விடும். இதற்கு தந்தி டி.வி. எப்படி பலிகடாவானது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆகவே, இதை தடுப்பது மட்டுமல்ல, சீன நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் செய்தி நிறுவனங்களையும், சமூக ஊடகங்களையும் தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் காரணமாகவே, மத்திய அரசு ஏராளமான சீன செயலிகளை தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோலதான், ஏற்கெனவே இலங்கை வானொலி ஒன்று அந்நாட்டின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்தது. பின்னர், மத்தய அரசு இதை தடை செய்தது. அதன் பிறகு, சமீபத்தில்தான் இந்த வானொலி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இதிலும் தினமும் காலையில் சீன செய்திகள் ஒலிப்பரப்பு செய்யப்படுகின்றன, இதன் Frequency நமது கடலோர மாவட்டங்களிலும் கேட்பதாகத் தெரிகிறது. இதன் மூலம் நமது பாரத நாட்டைச் சுற்றி மிகப்பெரிய சூழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆகவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இதே நமது பாரத செய்திகளை சீனாவில் ஒளிபரப்ப முடியுமா? என்றால் கேள்விக்குறியே! அவ்வளவு ஏன், இதர நாடுகளின் சமூக ஊடகங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. சீன அரசு நடத்தக் கூடிய சமூக ஊடகங்கள் மட்டுமே செயலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, தமிழக மக்களே உஷார். இதற்கு, மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசர மற்றும் அவசியத் தேவையாகும்” என்றார்.


Share it if you like it