உலகளவில் வேகமாக வளரும் நாடாக இந்தியா ; வாரன் பப்பெட் : மோடியை விமர்சித்தவர்கள் கண்ணாடியை பார்த்து துப்பி கொள்ளவும் !

உலகளவில் வேகமாக வளரும் நாடாக இந்தியா ; வாரன் பப்பெட் : மோடியை விமர்சித்தவர்கள் கண்ணாடியை பார்த்து துப்பி கொள்ளவும் !

Share it if you like it

இந்திய சந்தை ஏராளமான வணிகத்துக்கான வாய்ப்புகளை கொண்டிருப்பதாக உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் தலைவருமான வாரன் பஃபெட் தெரிவித்துள்ளார்.

பெர்க் ஷயர் நிறுவனத்தின் 2024-ம் ஆண்டு கூட்டம் அமெரிக்காவின் ஒமாஹாவில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட வாரன் பஃபெட்டிடம் இந்திய சந்தையில் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் குறித்து முதலீட்டாளர்கள் கேள்வியெழுப்பினர்.

அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் ஏராளமான பயன்படுத்திக்கொள்ளப்படாத வாய்ப்புகள் நிறையவே உள்ளன. 2023-24 நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8.4சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில் உலகளவில் வேகமாக வளரும் நாடாக இந்திய தனது நிலையை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

சர்வதேச செலாவணி நிதியத்தின் கணிப்புகள் இந்தியாவின் பொருளாதார எதிர்பார்ப்புகளை மேலும் வலுப்படுத்துகின்றன.

2024-ம் ஆண்டுக்கான வளர்ச்சி விகிதம் 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய சந்தையில் வணிகத்துக்கான வாய்ப்புகளை நாம் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பஃபெட் தெரிவித்தார்.

வரும் 2047-க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். அந்த லட்சியத்தை நோக்கி முன்னேறி வருகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவை உலக உலகின் குருவாக்க பிரதமர் மோடி இரவு பகல் பாராது உழைத்து வருகிறார். ஆனால் பொருளாதாரம் என்றால் என்ன வணிகம் என்றால் என்ன என்று தெரியாத தமிழ்நாட்டில் உள்ள திராவிட கட்சினர் பிரதமர் மோடியை விமர்சித்து வருகின்றனர்.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *