நமீபியா சிறுத்தைகள்… வனத்துக்குள் திறந்து விட்ட பிரதமர் மோடி!

நமீபியா சிறுத்தைகள்… வனத்துக்குள் திறந்து விட்ட பிரதமர் மோடி!

Share it if you like it

நமீபியா நட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தடைந்த 8 சிறுத்தைகளை, பிரதமர் மோடி தனது பிறந்தநாளான இன்று, மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள குனோ தேசியப் பூங்காவில் திறந்து விட்டார்.

இந்தியாவில் சிறுத்தை இனங்கள் படிப்படியாக அழியத் தொடங்கின. சத்தீஸ்கர் மாநிலம் கோரியா பூங்காவில் இருந்த கடைசி சிறுத்தையும், 1948-ம் ஆண்டு இறந்து விட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் சிறுத்தைகள் இனம் அழிந்துவிட்டதாக 1952-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு, கடந்த 74 ஆண்டுகளாக சிறுத்தை இனமே இல்லை. எனவே, பாரத பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, இந்தியாவுக்கு சிறுத்தைகளை கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த சில வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகள், மெல்ல மெல்ல செயல் வடிவம் பெற்றது.

இதன் தொடர்ச்சியாக, தென் ஆப்ரிக்க நாடான நமீபியாவுடன் நிகழாண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, 5 பெண் மற்றும் 3 ஆண் என 8 சிறுத்தைகளை நமீபியா அரசு இந்தியாவுக்கு நன்கொடையாக வழங்க முன்வந்தது. இந்த சிறுத்தைகளை மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் வைத்து பராமரிக்க இந்திய அரசு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, நம் நாட்டின் தேசிய விலங்கான புலி வடிவில் சிறப்பு விமானம் வடிவமைக்கப்பட்டது. இந்த சிறப்பு விமானம் நேற்று நமீபியா சென்றடைந்தது.

பின்னர், மேற்கண்ட 8 சிறுத்தைகளும் சிறப்பு விமானம் மூலம் இன்று காலை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு வந்தடைந்தன. பிறகு, ஜெய்ப்பூரிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மத்திய பிரதேச மாநிலத்துக்கு சிறுத்தைகள் கொண்டு செல்லப்பட்டன. இந்த சிறுத்தைகளை பிரதமர் மோடி தனது பிறந்த நாளான இன்று குனோ தேசிய பூங்காவில் திறந்து விட்டார்.


Share it if you like it