இந்திய எல்லையில் பாக். ஆளில்லா விமானம்!

இந்திய எல்லையில் பாக். ஆளில்லா விமானம்!

Share it if you like it

இந்திய எல்லையில் பறந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்களை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் அடிக்கடி இந்திய எல்லையில் அத்துமீறி வருவது தெரிந்த கதைதான். குறிப்பாக, ஜம்மு காஷ்மீர் மாநில எல்லை மற்றும் பஞ்சாப் மாநில எல்லைகளில் இந்த அத்துமீறல்கள் அதிகளவில் இருக்கின்றன. நள்ளிரவில் கோழைத்தனமாக இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவது, ஆளில்லா விமானங்களை விட்டு உளவு பார்ப்பது, போதை வஸ்துகள், அயுதங்களை கடத்துவது பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இந்திய வீரர்கள் விழிப்புடன் இருந்து பாகிஸ்தானின் சதித்திட்டங்களையும், அத்துமீறல்களையும் முறியடித்து வருகின்றனர். இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் பஞ்சாப் எல்லையான குர்தாஸ்புர் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் அத்துமீறி நுழைந்தது. இதைப் பார்த்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் (பி.எஸ்.எஃப்.) அந்த ஆளில்லா விமானத்தை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முயன்றனர். இதனால், அந்த விமானம் மீண்டும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் தானோ கலன் என்கிற கிராமத்தின் அருகே வெள்ளிக்கிழமை காலையில் மர்மமான சத்தம் கேட்டிருக்கிறது. இதையடுத்து அலர்ட்டான ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் ஆளில்லா விமானம் ஒன்று நுழைவதைக் கண்டனர். உடனே, அந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர். பின்னர், அந்த ஆளில்லா விமானத்தை சோதனை செய்தபோது, அது டி.ஜே.ஐ. மெட்ரீஸ் மாடல் 300 என்பதும் சீனாவில் தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, ராணுவ வீரர்கள் தானோ கலன் கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மற்றொரு கருப்பு நிற ஆளில்லா விமானம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றது. அந்த ஆளில்லா விமானத்தையும் ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

இந்தியாவுக்குள் ஆளில்லா விமானங்களை கடத்த பாகிஸ்தான் முயற்சிப்பது இது முதல் முறையல்ல. சுமார் 10 நாட்களுக்கு முன்பு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் உள்ள செர்ஹாட்டா பகுதியில் இதேபோல ஆளில்லா விமானங்கள் நுழைந்ததும், அதை நமது ராணுவ வீர்ர்கள் சுட்டு வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, ஆயுதங்கள் மற்றும் ஹெராயின் கடத்தல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2 ஆளில்லா விமானங்கள், ஒரு பைக், ஒரு கைத்துப்பாக்கி, 2 மெக்சின்கள் மற்றும் 8 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ஜக்ஜித் சிங் என்ற ஜக்கி. இவர் பஞ்சாபின் டர்ன் தரண் மாவட்டத்தில் வசித்தவர். அவரிடம் விசாரித்தோபது, ஆளில்லா விமானத்தை தான்தான் அனுப்பியதாக ஒப்புக்கொண்டார். தர்ன் தரண் ஜக்கி மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக சதர் காவல் நிலையத்தில் எற்கெனவே 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


Share it if you like it