இந்தியாவை மீண்டும் நேசிக்கிறோம் – இஸ்ரேல் !

இந்தியாவை மீண்டும் நேசிக்கிறோம் – இஸ்ரேல் !

Share it if you like it

சனிக்கிழமை அதிகாலையில் சுமார் 5000 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது தொடங்கிய ஹமாஸ் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பிறகு தாக்குதல்களில் 700 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயப்பட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவத்திடம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஆபரேஷன் அயன் சுவார்ட்ஸ் மூலம் பதிலடித் தாக்குதல்களில் 400க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன தரப்பில் இருந்து சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

இதுதொடர்பாக அமெரிக்கா தனது நட்பு நாடான இஸ்ரேலுக்கு தனது ஆதரவை தெரிவித்து, அப்பகுதியில் கப்பல்கள் மற்றும் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது .மேலும் ஹமாஸின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஜெர்மனியும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். இவ்வாறு இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் ஆதரவிற்கு இஸ்ரேல் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், இந்தியா மற்றும் அதன் மக்களின் அன்பைக் கண்டு நாங்கள் வியப்படைகிறோம். நாங்கள் உன்னை மீண்டும் நேசிக்கிறோம் ! இவ்வாறு பதிவிட்டுள்ளனர். பலரும் அந்த பதிவினை ஷேர் செய்து வருகின்றனர்.


Share it if you like it