2030ம் ஆண்டு சாதனை படைக்கும் இந்தியா – இன்றே பணியை துவங்கிய மத்திய அரசு

2030ம் ஆண்டு சாதனை படைக்கும் இந்தியா – இன்றே பணியை துவங்கிய மத்திய அரசு

Share it if you like it

கரியமிலவாயு வெளியேற்றத்தால் சுற்று சூழல் மாசுபாடுகிறது. இதனை கருத்தில் கொண்டு சுற்றுசூழலை பாதுகாக்கும் பொருட்டு மத்திய ரயில்வே துறை சில முக்கிய முடிவுகளை மேற்கொண்டுள்ளது. அதில் குறிப்பாக வரும் 2030 ஆண்டுக்குள் உலகின் மிகப் பெரிய, ‘பசுமை ரயில்வே’யாக இந்தியன் ரயில்வேயை மாற்ற திட்டமிட்டு, முழு வீச்சில் பணிகள் நடப்பதாக மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது

2030க்குள், ‘பூஜ்ய கரியமில வாயு வெளியேற்றம்’ என்ற இலக்கை நாம் எட்டி அணைத்து ரயில்களும் பசுமை ரயில்களாக மாற்றப்பட்டிருக்கும் இதன் மூலம், உலகின் மிகப் பெரிய பசுமை ரயில்வே என்ற பெயரை, இந்திய ரயில்வே வரும் 2030ம் ஆண்டு தங்கி நிற்கும் என மத்திய ரயில்வே துறை சார்பில் கூறப்பட்டிருக்கிறது.


Share it if you like it