ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படம்… சொல்வது அரவிந்த் கெஜ்ரிவால்!

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படம்… சொல்வது அரவிந்த் கெஜ்ரிவால்!

Share it if you like it

புதிய ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்துடன் லட்சுமி, விநாயகர் படங்களையும் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தி இருக்கிறார்.

இந்திய ரூபாய் நோட்டுக்களில் மகாத்மாக காந்தி படம் மட்டுமே இடம்பெற்று வருகிறது. அதேசமயம், பிற நாட்டு கரன்ஸிகளில் அந்நாட்டு மன்னர்கள் படமும், சில நாட்டு கரன்ஸிகளில் கடவுளின் படங்களும் இடம்பெற்று வருகிறது. இந்த நிலையில், இஸ்லாமிய நாடான இந்தோனேஸியா கரன்ஸியில் ஹிந்து கடவுளான விநாயகரின் படம் அச்சிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து, இந்திய ரூபாய் நோட்டுக்களிலும் செல்வத்தின் அதிபதியான லட்சுமி மற்றும் முழு முதற் கடவுளான விநாயகர் ஆகிய கடவுள்களின் படங்களை அச்சிட வேண்டும் என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இனி அச்சிடப்படும் புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படமும், மறுபுறம் லட்சுமி மற்றும் விநாயகரின் படங்களையும் சேர்க்க வேண்டும். ரூபாய் நோட்டுகளில் கடவுகளின் படங்களை சேர்ப்பது நாடு செழிக்க உதவும். நாம் என்னதான் முயற்சி செய்தாலும் கடவுள் அருள் இல்லையென்றால் பலன் அளிக்காது. கடந்த சில மாதங்களாகவே இந்திய பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது. தவிர, இந்தோனேசிய ரூபாயில் விநாயகர் படம் இருக்கிறது. ஒரு இஸ்லாமிய நாடு, அதுவும் 80% இஸ்லாமியர்களை கொண்ட நாடு, அவர்களால் அதை செய்ய முடியும் என்கிறபோது, நம்மாலும் செய்ய முடியும். இதுகுறித்து 2 நாட்களில் பிரதமருக்கு கடிதம் எழுதவுள்ளேன்” என்று கூறியிருக்கிறார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சு ஹிந்துக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேசமயம், இதுவரை அரவிந்த் கெஜ்ரிவாலை புகழ்ந்து தள்ளிய தமிழகத்தைச் சேர்ந்த ஹிந்து விரோத கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உட்பட திராவிட கட்சிகளைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திருமாவளவன் ஒரு கிறிப்டோ என்று பல ஆண்டுகளாகவே கூறப்பட்டு வரும் நிலையில், சமீபத்திய அவரது பேச்சுக்களும் அவரது ஹிந்து விரோதப் போக்கை தெளிவாகக் காட்டி வருகிறது. அந்த வகையில், தற்போது ரூபாய் நோட்டுக்களில் லட்சுமி, விநாயகர் படங்களை அச்சிட வேண்டும் என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பது, திருமா ஒரு ஹிந்து விரோத சக்தி என்பதை உறுதிப்படுத்துகிறது.


Share it if you like it