14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி !

14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடி !

Share it if you like it

மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் நேற்று கூறியதாவது, “உலக அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தை பாராட்டி, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, 14 நாடுகளின் மிக உயர்ந்த தேசிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய சுற்றுச்சூழல் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது.

மேலும், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட முக்கிய விருதுகளை பட்டியலிட்டார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் மிக உயரிய ‘ஸ்டேட் ஆர்டர் ஆப் காஜி அமீர் அமானுல்லா கான்’ விருது, 2018-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தின் உயரிய ‘கிராண்ட் காலர் ஆப் தி ஸ்டேட் ஆப் பாலஸ்தீன‘ விருது, 2018-ஆம் ஆண்டு ஐ.நா.வின் ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ விருது, 2019-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய ‘ஆர்டர் ஆப் சயீத்’ விருது, 2019-ஆம் ஆண்டு ரஷ்யாவின் மிக உயரிய ‘ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ‘ விருது, 2019-ஆம் ஆண்டு பஹ்ரைனின் உயரிய ‘கிங் ஹமாத் ஆர்டர் ஆப் தி ரினைசன்ஸ்’ விருது, 2019-ஆம் ஆண்டு மாலத்தீவு உயரிய ‘ஆர்டர் ஆப் தி டிஸ்டிங்கிஸ்ட் ரூல் ஆப் நிஷான் இசுதின்’ விருது, 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ’லெஜியன் ஆப் மெரிட்’ என்ற விருது, 2021-ஆம் ஆண்டு பூடானின் மிக உயரிய “ஆர்டர் ஆப் தி ட்ருக் கியால்போ’ விருது, 2023-ஆம் ஆண்டு பிஜி நாட்டின் உயரிய ‘கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் பிஜி’ விருது, பப்புவா நியூ கினியாவின் மிக உயரிய ’கம்பேனியன் ஆப் தி ஆர்டர் ஆப் லோகோஹு’ விருது, எகிப்து நாட்டின் மிக உயரிய ‘ஆர்டர் ஆப் தி நைல்’ விருது, கிரீஸ் நாட்டின் உயரிய ‛கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர்’ விருது, பிரான்ஸ் நாட்டின் உயரிய ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லீஜியன் ஆப் ஹானர்‘ விருது ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடிக்கு உயரிய விருதுகளை வழங்குவது, இரு தரப்பு, பிராந்திய மற்றும் உலக அளவில், அவரது அரசியல் திறன் மற்றும் தலைமைத்துவத்திற்கான தெளிவான அங்கீகாரம் என்று கூறினார்.


Share it if you like it