ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஏற்பட்ட போரை உடனே நிறுத்த வேண்டும் என சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், பூ உலகின் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தி செய்ய வேண்டாம் என்று உளறி கொட்டி இருப்பதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு போல் அல்லாமல். மோடி தலைமையிலான அரசு இந்திய எல்லைகளை பாதுகாப்பதில் அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக, இந்திய சீன எல்லை அருகே வேகமாக சாலைகள், மேம்பாலங்கள், போன்றவற்றை அமைப்பது. எல்லைக்கு செல்லும் வழியை மேலும் வலிமைப்படுத்துவது என இந்தியா தீவிரமான பணிகளை இன்று வரை மேற்கொண்டு வருகிறது.
ஒரு நாடு மிக வலிமையாக இருந்தால் மட்டுமே எதிரி நாடுகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள், தொல்லைகள், எதுவும் எழமால் இருக்கும். இதன் மூலம், அந்நாட்டு குடிமக்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ முடியும். அதே நாடு பாதுகாப்பில் மிகவும் பின் தங்கி இருந்தால் எதிரி நாடுகள் மிக சுலபமாக அந்நாட்டை வீழ்த்தி எளிதில் அடிமைப்படுத்தி விட முடியும் என்பதை அறிவார்ந்த மக்கள் நன்கு அறிவர்.
போதிய ராணுவ வலிமை இல்லாமல் இருந்த திபெத் இன்று சீனாவிடம் அடிமைப்பட்டு பல இன்னல்களையும், துயரங்களையும் அனுபவித்து வருகிறது. இப்படி, ராணுவ வலிமை அதிகம் இல்லாத உக்ரைன் நாட்டை தான், உலகின் சக்தி வாய்ந்த ராணுவத்தை கொண்ட ரஷ்யா அபகரிக்க முயல்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள் என உக்ரைன் உலக நாடுகளிடம் மன்றாடி வருகிறது. இப்படி, ராணுவ தளவாடங்கள் மற்றும் பலம் வாய்ந்த ராணுவம் இல்லாத எவ்வளவோ நாடுகள் இன்று வரை திணறி வருகிறது இந்த சூழலில் பூ உலகின் அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் தமிழ்நாட்டில் ராணுவ தளவாட உற்பத்தி வேண்டாம் என்று ட்விட்டரில் பதிவு செய்து இருப்பதன் மூலம் இவரின் உண்மையான சுயரூபம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.