சீன எல்லை அருகே இந்திய ராணுவம் சாலை அமைக்க கூடாது என நீதிமன்றத்தை நாடியே NGO..!

சீன எல்லை அருகே இந்திய ராணுவம் சாலை அமைக்க கூடாது என நீதிமன்றத்தை நாடியே NGO..!

Share it if you like it

வெளியில் இருக்கும் எதிரிகளை விட இந்தியாவிற்குள் இருக்கும் எதிரிகள் மிகவும் ஆபத்தானவர்கள் நெட்டிசன்கள் கருத்து.

இந்திய சீன எல்லை அருகே சாலை பணிகளை மத்திய அரசு மேற்கொள்ள கூடாது என “Citizens For Green Doon” என்னும் அமைப்பு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் அதிகம் வெறுக்கப்படும் நாடான சீனாவின் அத்துமீறிய செயலால், கல்வான் பள்ளதாக்கு பகுதியில் 21-க்கும் மேற்பட்ட நமது ராணுவ வீரர்களை இந்த பாரத தேசம் இழந்தது.

சீனாவின் போக்கிரி தனத்திற்கு முடிவு கட்டும் விதமாக மோடி தலைமையிலான அரசு, இந்திய எல்லை பகுதியில் பல்வேறு கட்டுமான பணிகளை மிக தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. முந்தைய காங்கிரஸ் அரசு போல் அல்லாமல், பா.ஜ.க அரசு எல்லை பகுதியில் வேகமான பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், “Citizens For Green Doon” என்னும் NGO அமைப்பு. இந்திய ராணுவம் எல்லையோரம் சாலைகளை அமைக்க கூடாது என்று நீதிமன்றத்தை நாடி இருப்பது இந்திய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியில் இருக்கும் எதிரிகளை விட இந்தியாவிற்குள் இருந்து கொண்டு கடும் தொல்லை கொடுக்கும் கம்யூனிஸ்ட்கள், பிரிவினைவாதிகள், போலி நெறியாளர்கள், வரிசையில் இணைந்துள்ள Citizens For Green Doon” அமைப்பின் பின்னணியை மத்திய அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it