ஹிந்துக்கள் புனித மரத்தின் கீழ் நிர்வாண போட்டோ: ரஷ்ய பெண் நாடு கடத்தல்!

ஹிந்துக்கள் புனித மரத்தின் கீழ் நிர்வாண போட்டோ: ரஷ்ய பெண் நாடு கடத்தல்!

Share it if you like it

இந்தோனேசியாவின் புராதனமான தீவான பாலியில் உள்ள ஹிந்துக்களின் புனித மரத்தின் கீழ் நின்று நிர்வாணமாக போஸ் கொடுத்த ரஷிய பெண் நாடு கடத்தப்பட்டிருக்கிறார்.

இந்தோனேஷியாவின் மாகணமாக பாலி தீவில் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்த தீவை பிற்கால சோழர்கள் மற்றும் பிற்கால பல்லவர்கள் ஆட்சி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தீவில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான புனித மரம் இருக்கிறது. இது ஹிந்துக்களின் புனித மரமாகக் கருதப்படுகிறது. மேலும், இங்குள்ள மலைகள், மரங்கள் உள்ளிட்ட இயற்கை அம்சங்கள் கடவுளின் புனித வீடுகளாகக் கருதப்படுகின்றன.

இந்த நிலையில்தான், மேற்கண்ட புனித மரத்தின் கீழ் நின்று நிர்வாணமாக போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் ரஷிய பெண் ஒருவர். இன்ஸ்டாகிராம் இன்புளுயன்சரான இவரது பெயர் லூயிசா கோசிக். 40 வயதான இவர், தற்காலிக கோல்டன் விசாவை பயன்படுத்தி, கடந்த ஜனவரி மாதம் பாலி தீவிற்குள் நுழைந்திருக்கிறார். அப்போது, புனித மரத்தின் கீழ் நின்று நிர்வாணமாக போட்டோ எடுத்து, அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

இதையடுத்து, தங்களது புனித மரத்தை கொச்சைப்படுத்தி விட்டதாகக் கொதித்தெழுந்த நெட்டிசன் ஒருவர், ”எங்கள் நிலத்தை அவமதிக்கும் அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பாலி எங்கள் வீடு, உங்களுடையது அல்ல! எங்கள் புனித மரங்களின் அருகில் நிர்வாணப் படங்களை எடுத்து, நீங்கள் அழகாக இருப்பதாக காட்டிக் கொள்கிறீர்களா? எங்கள் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை உங்களால் மதிக்க முடியாவிட்டால் தயவுசெய்து உங்கள் நாட்டிற்கு திரும்பிச் செல்லுங்கள்” என்று திட்டி தீர்த்து பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இதற்கு பதிலளித்த அந்த ரஷ்ய பெண், மேற்கண்ட போட்டோக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது எனவும், அது ஹிந்துக்களின் புனித மரம் என்பது தனக்குத் தெரியாது எனவும் கூறியிருந்தார். எனினும், கடந்த 12-ம் தேதி அப்பெண் இந்தோனேஷிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் ரஷியாவிற்கு நாடு கடத்தப்பட்டார் என்று பாலி அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே, புனித மரத்தின் முன்பு நிர்வாணமாக போஸ் கொடுத்த அலினா பஸ்லீவா என்கிற ரஷிய பெண், மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it