ஈரான் வீராங்கனைக்கு; அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல்!

ஈரான் வீராங்கனைக்கு; அடிப்படைவாதிகள் கொலை மிரட்டல்!

Share it if you like it

ஈரான் நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீராங்கனைக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் என்கிற நடைமுறை இருந்து வருகிறது. மேலும், இஸ்லாமிய சட்டதிட்டங்களை பெண்கள் முறையாக கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க கலாசார காவல்துறை என்கிற சிறப்புப் பிரிவும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பு காவல் பிரிவினர், முறையாக ஹிஜாப் அணியாத பெண்கள், இஸ்லாமிய சட்டதிட்டங்களை முறையாக கடைப்பிடிக்காத பெண்களை கைது செய்வது, தாக்குவது, அபராதம் விதிப்பது என்பன போன்ற இழி செயல்களில் இன்று வரை ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஈரானின் குர்திஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த மாஷா அமினி என்கிற 22 வயது இளம்பெண், தங்களது உறவினரை பார்ப்பதற்காக கடந்த (2022) செப்டம்பர் மாதம் தலைநகர் தெஹ்ரான் நோக்கி தனது குடும்பத்தினருடன் காரில் வந்துள்ளார். அப்போது, அப்பெண் முறையாக ஹிஜாப் அணியாததாகக் கூறி, கலாசார காவல் பிரிவினரால் தாக்கப்பட்டதோடு, கைதும் செய்யப்பட்டார். காவல் நிலையத்திலும் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட அவர், கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்தார். இச்சம்பவம் குர்திஸ்தான் மட்டுமின்றி ஈரான் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவத்தின் தாக்கம், இன்று வரை ஈரானில விவாத பொருளாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில், ஈரான் நாட்டை சேர்ந்தவர் செஸ் விளையாட்டு வீராங்கனை சாரா காதெம். இவர், கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற செஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டார். அப்போது, அவர் ஹிஜாப் அணியால் செஸ் போட்டியில் கலந்து கொண்டார்.

இதனால், கோவமடைந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சாரா காதெம் ஈரான் திரும்ப கூடாது என செல்போன் வாயிலாக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதே கருத்தினை அவர்களது குடும்பத்தை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it