ரேஷனில் முறைகேடு : அசால்ட்டாக பதிலளித்த அரசு ஊழியர் : வேடிக்கை பார்த்த உயர் அதிகாரி !

ரேஷனில் முறைகேடு : அசால்ட்டாக பதிலளித்த அரசு ஊழியர் : வேடிக்கை பார்த்த உயர் அதிகாரி !

Share it if you like it

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அருகே உள்ள மாடப்பாக்கம் சுதர்சன் நகரில் உள்ள நியாய விலை கடை ஒன்றில் ராமநாத கிருஷ்ணன் என்பவர் ரேஷன் வாங்க கடைக்கு சென்றுள்ளார். அங்கு 10 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ துவரம் பருப்பை மட்டும் வாங்கிய நிலையில், அரிசி இலவசம் என்பதால் துவரம் பருப்புக்கு மட்டும் 30 ரூபாய் கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவருடைய அலைபேசிக்கு குறுந்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் 10 கிலோ புழுங்கலரிசி,1 பாமாயில் பாக்கெட், 2 கிலோ சர்க்கரை சேர்த்து மொத்தம் 120 ரூபாய்க்கு வாக்கியதற்கான குறுந்செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த ராமநாத கிருஷ்ணன் உடனடியாக ரேஷன் கடைக்கு சென்று அங்குள்ள பெண் ஊழியரான விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ராமநாத கிருஷ்ணன். அதற்கு அந்த பெண் ஊழியர் அசால்ட்டாக நான் பில் போட்டு விட்டேன் அதை மாற்ற முடியாது. நீங்கள் பொருளை வேண்டுமானால் வாங்கி செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதனை கேட்டு கோபமடைந்த ராமநாத கிருஷ்ணன் நாங்கள் வாங்காத பொருளுக்கு வாங்கி விட்டதாக குறுந்செய்தி வருகிறது. அப்படி என்றால் அரசு பொருட்கள் பதுக்கி வைக்கப்படுகிறதா என ஆவேசமாக பேசியுள்ளார். உடனே அலைபேசியில் உயர் அதிகாரிகளுக்கு ரேஷன் கடைகளில் முறைகேடு நடப்பதாக கூறி புகார் அளித்தார். புகார் அளித்துவிட்டு அங்கிருந்து போகாமல் இருந்தவரை பார்த்து ஊழியர் புகார்தான் அளித்துவிட்டீர்களே அதன்பிறகு அவர்கள் பார்த்து கொள்வார்கள் நீங்கள் கிளம்புங்க என்று தெனாவெட்டாக கூறியுள்ளார். அங்கிருந்த பெண்களும் அந்த பெண் ஊழியருக்கு ஆதரவாக இதெல்லாம் காலம் காலமாக நடப்பதுதானே என்று வக்காலத்து வாங்கியுள்ளார். இத்தனையும் பதிவாகிறது என்று அறிந்த பெண் ஊழியர் ரேஷன் கடையை அடைத்துவிட்டு இடத்தை காலி செய்துள்ளார். அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் பூட்டிய ரேஷன் கடை முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


Share it if you like it