விருது வாங்குவதும், கொடுப்பதும், தி.மு.க-விற்கு புதிது அல்ல. ஈ.வெ. ராமசாமி அவர்களுக்கு யுனொஸ்கோ விருது கொடுக்கப்பட்டது என்கின்ற பிம்பிலிக்கா பிலாபியை, பல ஆண்டுகள் கழித்து தற்பொழுது தான் அது உலக மகா நாடகம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
அதே போல் தமிழர்களுக்கு பெரிதும் அறிமுகம் இல்லாத உலக தலைவர்கள் ஸ்டாலின் அவர்களை பாராட்டியதாக பொய்களை கட்டவிழ்த்து விட்டு பின்னர் உண்மை வெளியாகும் பொழுது உடன் பிறப்புக்களின் மூக்குடையும் சம்பவங்கள் ஏராளம்.
அந்த வரிசையில் தற்பொழுது இந்தியாவின் மிகச் சிறந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் என்று சமூக வலைத்தளங்களில் மார்தட்டி கொள்கிறார்கள் உதய் அண்ணாவின் தம்பிகள்.
இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று ஆராய முயலும் பொழுது தான் பல வேடிக்கையான தகவல்கள் தெரிய வந்துள்ளது. ஆர்மாக்ஸ் மீடியா என்னும் நிறுவனம் இதுபோன்ற பல கருத்து கணிப்பை நடத்தி வருவது வழக்கம். வாரந்தோறும் சுமார் 1,600 நபர்களிடம் தொலைபேசியின் மூலம் சேகரிக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த கருத்து கணிப்பு வெளியிடப்படுகிறது.
8 கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் வெறும் 1,600 நபர்களிடம் மட்டும் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகள் உண்மையை எந்த அளவுக்கு பிரதிபலிக்கும் என்பது கேள்விக்குறியே.
இந்தியாவில் தற்பொழுது கொரோனா நோயாளிகள் அதிகமாக இருக்கும் மாநிலம் கேரளா. தொழில் செய்ய முடியாமல் கிட்டெக்ஸ் போன்ற நிறுவனங்கள் அம்மாநிலத்தை விட்டு தற்பொழுது வெளியேறி வரும் நிலையில், அம்மாநில முதல்வருக்கு இரண்டாவது இடத்தை கொடுத்துள்ளது இந்த இணையதளம்.
தேர்தல் வாக்குறுதியை எப்பொழுது நிறைவேற்றுவீர்கள் என்ற மக்கள் கேள்விக்கு நாங்கள் என்ன தேதி போட்டு இருக்கிறோமா? என்று பதில் அளிக்கும் அரசை இந்த கருத்து கணிப்பில் சேர்த்து கொண்டதே பெரும் கேலி கூத்தானது.