ஓட்டு அரசியலுக்காக மக்களின் உயிருடன் விளையாடுகிறதா கேரள அரசு? 

ஓட்டு அரசியலுக்காக மக்களின் உயிருடன் விளையாடுகிறதா கேரள அரசு? 

Share it if you like it

பக்ரீத் பண்டிகையை ஒட்டி, கேரளாவில் வரும் 18,19, 20 ஆகிய தேதிகளில் கொரோனா விதிமுறைகள் தளர்த்தப்படுவதாக அம்மாநில கம்யூனிஸ்ட் அரசு தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் இறைச்சி கடை, நகைக்கடை, துணிக்கடை, என பெரும்பாலான கடைகளை திறக்க அரசு அறிவித்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜ.க ஆளும் உத்திரகாண்ட் மாநிலத்தில் கடந்த 13-ம் தேதி கணக்கின் படி, கொரோனா நோயாளிகள் நாள் ஒன்றிற்கு 44 நபர்கள் மட்டுமே. இருந்தும் கூட அந்த பகுதிகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் கன்வர் யாத்திரையை அம்மாநில அரசு தடை செய்துள்ளது.

கடந்த ஆண்டு கொரோனாவை காரணம் காட்டி ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகையை தடை செய்த கேரள கம்யூனிஸ்ட் அரசு, நாட்டிலேயே அதிக கொரோனா நோயாளிகளை கொண்ட முதல் மாநிலமாக  கேரளா மாறியுள்ள இந்த சூழலில், ஓட்டு அரசியலுக்காக மக்களின் உயிரை பற்றி துளியும் கவலைப்படாமல் ஆபத்தில் தள்ளும் இச்செயலால் அம்மாநில மக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it