பஸ் ஸ்டாண்ட் என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா ? – உமா ஆனந்த் பாய்ச்சல் ?

பஸ் ஸ்டாண்ட் என்ன உங்க அப்பா வீட்டு சொத்தா ? – உமா ஆனந்த் பாய்ச்சல் ?

Share it if you like it

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்திலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கான பேருந்துநிலையம் கட்டப்பட்டது. மருத்துவ வசதி, வாகன நிறுத்துமிடம் என அதிநவீன வசதிகளுடன் சுமார் 393 கோடி ரூபாயில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.

ஆனால் தென் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்தாமல், கூடுவாஞ்சேரி, வண்டலூர் பகுதிகளில் நிறுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் பாஜக மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் ஒரு பேட்டியில், பிரதமர் மோடி திறந்து வைக்கும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்களுக்கு சுயநலமின்றி எவ்வளவு சரியாக பெயர் சூட்டுகிறார். ஆனால் திமுக ஸ்டாலினோ பேருந்து நிலையம் திறந்தாலும், பார்க் திறந்தாலும் கலைஞர் பெயர் எதற்கும் உதவாத பெரியார் பெயரைத்தான் சுயநலமாக சூட்டுகிறார். தற்போது கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயரை சூட்டியுள்ளார். ஸ்டாலினின் மகன் உதயநிதி பேசியது போல பேருந்து நிலையத்திற்கு கலைஞர் பெயர் வைக்க பஸ் ஸ்டாண்ட் என்ன அவங்க அப்பா வீட்டு சொத்தா ? என்று உமா ஆனந்த் பேசியுள்ளார். இதுதொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

https://x.com/ithanagaraj/status/1742441057860923882?s=20


Share it if you like it