அடுத்த முதல்வர் திருமாவா ? விசிக தொண்டர்கள் ராக் : திமுக ஷாக் !

அடுத்த முதல்வர் திருமாவா ? விசிக தொண்டர்கள் ராக் : திமுக ஷாக் !

Share it if you like it

சென்னையிலிருந்து கோவைக்கு விசிக தலைவர் திருமாவளவன் விமானத்தில் சென்றுள்ளார். கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த திருமாவளவனை வரவேற்க விசிக தொண்டர்கள் விமான நிலையத்தில் திரண்டனர். திருமாவளவன் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் தொண்டர்கள் உற்சாகத்தில் வருங்கால முதல்வர் அண்ணண் திருமாவளவன் வாழ்க என்று கோஷமிட்டனர். இதனால் திருமாவளவன் அதிர்ச்சி அடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் வேகமாக காரில் ஏறிச் சென்றார். இந்த காணொளியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அடுத்த முதல்வர் உதயநிதி என்று திமுக வட்டாரங்கள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில் திருமாவளவன் முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறாரா? என்று சந்தேகம் எழுகிறது. திருமாவே திமுகவிடம் கூட்டணி வைத்துக்கொண்டு 2 சீட்டுக்காகக் ஒட்டிக்கொண்டிருக்கிறார். அவரை முதல்வர் என்று கூறினால் என்ன சொல்வது என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Share it if you like it